வெள்ளரிக்கரையில் சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தால் விபத்து அபாயம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
தாண்டிக்குடி--தாண்டிக்குடி வெள்ளரிக் கரையில் சேதமடைந்த பள்ளி கட்டடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மணலுார் ஊராட்சி வெள்ளரிக்கரையில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயில்கின்றனர். பழமையான கட்டடத்தில் செயல்படும் பள்ளியின் மேற்கூரை, சுற்றுச்சுவர், கதவு, ஜன்னல், தரை தளம் ஆகியன சேதமடைந்துள்ளது. தற்போது கனமழை பெய்யும் நிலையில் மழை நீர் கசிவு

தாண்டிக்குடி--தாண்டிக்குடி வெள்ளரிக் கரையில் சேதமடைந்த பள்ளி கட்டடத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மணலுார் ஊராட்சி வெள்ளரிக்கரையில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் பயில்கின்றனர். பழமையான கட்டடத்தில் செயல்படும் பள்ளியின் மேற்கூரை, சுற்றுச்சுவர், கதவு, ஜன்னல், தரை தளம் ஆகியன சேதமடைந்துள்ளது. தற்போது கனமழை பெய்யும் நிலையில் மழை நீர் கசிவு ஏற்படுகிறது.அவ்வப்போது கட்டுமானத்தின் மேல் பூச்சுகள் இடிந்து விழுகின்றன. குழந்தைகள் பயிலும் பள்ளியில் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கட்டடத்தை சீரமைக்க ஆசிரியர்கள் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை. மலைப்பகுதியில் உள்ள இப்பள்ளியின் அவலத்தால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர். மாவட்ட நிர்வாகம் சேதமடைந்துள்ள இப்பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X