சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பணிக்கு போலி ஆணை மோசடி கும்பலுக்கு வலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:அரசு வேலைக்கு போலி நியமன ஆணை தயாரித்து, பணம் சுருட்டும் மோசடி கும்பலால், வருவாய் துறையினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.தமிழக அரசு முத்திரையுடன், அசல் நியமன ஆணையை போலவே, திருப்பூர் கலெக்டர் வினீத் பெயரில் தயாரிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பணிக்கான போலி நியமன ஆணை விவகாரம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில், கலெக்டர் அலுவலக முத்திரை பதிக்கப்பட்டு, கலெக்டரின்
 அரசு பணிக்கு போலி ஆணை மோசடி கும்பலுக்கு வலை

திருப்பூர்:அரசு வேலைக்கு போலி நியமன ஆணை தயாரித்து, பணம் சுருட்டும் மோசடி கும்பலால், வருவாய் துறையினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.
தமிழக அரசு முத்திரையுடன், அசல் நியமன ஆணையை போலவே, திருப்பூர் கலெக்டர் வினீத் பெயரில் தயாரிக்கப்பட்ட அலுவலக உதவியாளர் பணிக்கான போலி நியமன ஆணை விவகாரம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில், கலெக்டர் அலுவலக முத்திரை பதிக்கப்பட்டு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் - பொது, நவம்பர் 15 என்ற தேதியில் கையொப்பமிட்டுள்ளது போல், நியமன ஆணை தயாரிக்கப்பட்டுள்ளது. இது, வருவாய் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கலெக்டர் வினீத்திடம் கேட்டதற்கு, ''போலி நியமன ஆணை தயாரித்து, மக்களை ஏமாற்றுவது குறித்து இன்று தான் தகவல் கிடைத்தது. வெளிமாவட்டத்தில் உள்ள நபர்கள், இளைஞர்களை ஏமாற்றி, போலி நியமன ஆணை தயாரித்து கொடுத்தது, முதல் கட்ட விசாரணையில் தெரிந்தது.''முறைகேடாக செயல்படும் கும்பல் குறித்து, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளோம். மோசடியில் ஈடுபடுவோரை பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X