பொது செய்தி

தமிழ்நாடு

'ஹெல்மெட்' வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சேலம்:'ஹெல்மெட்' வாங்கினால், 1 கிலோ தக்காளி இலவசம்' என, வியாபாரி ஒருவர் அறிவித்ததால் பலர் வாங்கி சென்றனர்.தமிழகத்தில் பெய்யும் தொடர் மழையால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கிலோ 150 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில், சேலம் கோட்டையில் செயல்படும் ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில், '449 ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட் வாங்கும் வாடிக்கையாளருக்கு, 1 கிலோ தக்காளி இலவசம்' என
 'ஹெல்மெட்' வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்

சேலம்:'ஹெல்மெட்' வாங்கினால், 1 கிலோ தக்காளி இலவசம்' என, வியாபாரி ஒருவர் அறிவித்ததால் பலர் வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் பெய்யும் தொடர் மழையால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கிலோ 150 ரூபாயை தாண்டியுள்ளது. இந்நிலையில், சேலம் கோட்டையில் செயல்படும் ஒரு ஹெல்மெட் விற்பனை கடையில், '449 ரூபாய் மதிப்புள்ள ஹெல்மெட் வாங்கும் வாடிக்கையாளருக்கு, 1 கிலோ தக்காளி இலவசம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, முதல் விற்பனையை நடிகர் பெஞ்சமின் துவக்கி வைத்தார்.சேலத்தில் தக்காளி கிலோ, 150 ரூபாய்க்கு விற்றதால், பலர் ஹெல்மெட் வாங்கி, தக்காளியை இலவசமாக பெற்றுச் சென்றனர்.


திருமண பத்திரிகை



கோவை துணை வேளாண் இயக்குனர் - வேளாண் வணிகம் சுந்தரவடிவேலு கூறியதாவது: தக்காளி தட்டுப்பாடு காரணமாக,நுகர்வோர் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, கோவையில் உள்ள உழவர் சந்தை உள்ளிட்ட காய்கறி அங்காடிகளில், நபர் ஒருவருக்கு 2 கிலோ தக்காளி மட்டுமே வழங்க அறிவுறுத்தி உள்ளோம். உழவர் சந்தையில் மொத்தமாக தக்காளியை யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது. திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, திருமண பத்திரிகை காண்பித்தால் மட்டுமே அதிக அளவில் தக்காளி வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X