ஏ.பி.ஆர்.ஓ., வேலை? ரூ.40 லட்சம் மோசடி!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.பி.ஆர்.ஓ., வேலை? ரூ.40 லட்சம் மோசடி!

Added : நவ 25, 2021
Share
வேலுார்:ஏ.பி.ஆர்.ஓ., பணி வாங்கி தருவதாக, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஓய்வு பெற்ற போலீஸ்காரர், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் சந்திரன், 63; ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவர் வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார்:ரயில்வே போலீசில் ஓய்வு பெற்ற பின் ரியல் எஸ்டேட் தொழில் துவங்கினேன்.

வேலுார்:ஏ.பி.ஆர்.ஓ., பணி வாங்கி தருவதாக, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஓய்வு பெற்ற போலீஸ்காரர், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
வேலுார் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்தவர் சந்திரன், 63; ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவர் வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார்:ரயில்வே போலீசில் ஓய்வு பெற்ற பின் ரியல் எஸ்டேட் தொழில் துவங்கினேன்.

அப்போது வேலுார் அடுத்த குப்பம், பொய்கையை சேர்ந்த மோகன், மனோகரன் ஆகிய இருவரும் அறிமுகமாகினர்.அவர்கள், என் மருமகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினர். சென்னையைச் சேர்ந்த ஜெயந்தி, ஸ்டெல்லா ஆகியோரை அணுகினால் அரசு வேலை கிடைக்கும் என தெரிவித்தனர்.

அதன்படி, அந்த பெண்களிடம் பேசினேன்.என் மருமகளுக்கு ஏ.பி.ஆர்.ஓ., பணிவாங்கி தருவதாகவும், அதற்கு 40 லட்சம் ரூபாய் செலவாகும் எனக் கூறினர். சில தவணைகளாக, 40 லட்சம் ரூபாய் கொடுத்தேன். பணத்தை பெற்று கொண்ட நான்கு பேரும் வேலை வாங்கி தராமல் மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X