பொது செய்தி

இந்தியா

துறவி நரேந்திர கிரி தற்கொலை; சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-உத்தர பிரதேசத்தின் அகில பாரதிய அகாடா பரிஷத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரியை, அவரது சீடர்களான ஆனந்த் கிரி உள்ளிட்ட மூவர் உளவியல் ரீதியாக மிரட்டி கடுமையான மன உளைச்சல் அளித்ததை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.'வீடியோ'உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள

புதுடில்லி-உத்தர பிரதேசத்தின் அகில பாரதிய அகாடா பரிஷத்தின் தலைவர் மஹந்த் நரேந்திர கிரியை, அவரது சீடர்களான ஆனந்த் கிரி உள்ளிட்ட மூவர் உளவியல் ரீதியாக மிரட்டி கடுமையான மன உளைச்சல் அளித்ததை அடுத்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.



latest tamil news



'வீடியோ'

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரயாக்ராஜ் நகரில் அகில பாரதிய அகாடா பரிஷத் என்ற துறவிகளுக்கான அமைப்பு உள்ளது. பல்வேறு மடாலயங்கள், கோவில்கள் இந்த அமைப்பின் கீழ் செயல்படுகின்றன. துறவிகளுக்கான மிகப் பெரிய அமைப்பாக இது உள்ளது. இந்த அமைப்புக்கு மஹந்த் நரேந்திர கிரி என்பவர் தலைவராக இருந்தார்.

இந்நிலையில் பிரயாக்ராஜில் உள்ள பாகம்பரி மடத்தில், நரேந்திர கிரி கடந்த செப்., மாதம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கில் நரேந்திர கிரியின் சீடர்களான ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, அவரது மகன் சந்தீப் திவாரி ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன் விபரம்:தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக நரேந்திர கிரி, 'வீடியோ' ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், 'என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக ஒரு பெண்ணுடன் நான் இருக்கும் வீடியோ ஒன்றை ஆனந்த் கிரி போலியாக தயாரித்துள்ளார். அதை பொது வெளியில் வெளியிட்டு என் பெயருக்கு களங்கம் விளைவிக்க இருப்பதாக மிரட்டி வருகிறார்' என கூறியுள்ளார்.


நடவடிக்கை

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனந்த் கிரி மற்றும் அத்யா பிரசாத் திவாரி ஆகியோர் முறைகேடாக சொத்து சேர்த்ததை அறிந்த நரேந்திர கிரி, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். தனக்கு பின் பாகம்பரி மடத்தின் தலைவராக ஆனந்த் கிரியை நியமிக்க நரேந்திர கிரி முடிவு செய்திருந்தார். இந்த குற்றச்சாட்டை அடுத்து அந்த முடிவை மாற்றிக் கொண்டார். இது, ஆனந்த் கிரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


மேலும் அத்யா பிரசாத் திவாரியின் மகனுக்கு சொந்தமான பூக்கடை ஒப்பந்தத்தை நரேந்திர கிரி ரத்து செய்துள்ளார். இதைஅடுத்து நரேந்திர கிரிக்கு எதிராக மூவரும் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.உளவியல் ரீதியாக அளிக்கப்பட்ட மிரட்டலால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நரேந்திர கிரி தற்கொலை செய்து கொண்டார்.இவ்வாறு குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karuppasamy - chennai,இந்தியா
25-நவ-202111:30:34 IST Report Abuse
karuppasamy இதிலிருந்து என்ன தெரிகிறது . இவர் துறவி கிடையாது .
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
25-நவ-202110:24:05 IST Report Abuse
pattikkaattaan வீடியோ போலியாக இருக்கும்பட்சத்தில் ஏன் ஐயா நீர் பயப்பட வேண்டும்? அரசு உங்கள் பக்கம் நின்றிருக்கும் .. ஒரு துறவி உயிரை மாய்த்துக்கொள்ளலாமா ?..
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
25-நவ-202108:16:31 IST Report Abuse
Palanisamy T தற்கொலை செய்துக் கொண்டால் அவரும் சாதாரண மாந்தர்தான். உண்மையான துறவிகள் இறைவனுக்காக வாழ்பவர்கள் துறந்தார்ப் பெருமை துணைக் கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்றத்து என்றுக் குறள் பாடுகின்றது. துறவிகளுக்கு மனவுளைச்சலில்லை. துறவிகளென்றால் நம்மவர்களுக்கு துறவறம் விளையாட்டுப்பொருளாய் ஆகிவிட்டது. இவர் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X