சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரு குறளுக்கு 1 டாலர் பரிசு! அமெரிக்காவில் அசத்தும் புதுகை இன்ஜினியர்

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, அமெரிக்காவில் தமிழ் பள்ளி நடத்தி, திருக்குறள் பாடத்துக்கு பரிசுகள் வழங்கி அசத்தி வருகிறார்.புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தைச் சேர்ந்தவர் ராமன் வேலு. பொறியியலில் இளங்கலை பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அங்கீகாரம்சிறப்பான பங்களிப்புக்காக, கவுரவ டாக்டர் பட்டமும்

புதுக்கோட்டை:புதுக்கோட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, அமெரிக்காவில் தமிழ் பள்ளி நடத்தி, திருக்குறள் பாடத்துக்கு பரிசுகள் வழங்கி அசத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், ராயவரத்தைச் சேர்ந்தவர் ராமன் வேலு. பொறியியலில் இளங்கலை பட்டம், வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.


அங்கீகாரம்

சிறப்பான பங்களிப்புக்காக, கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுஉள்ளார்.மனைவி விசாலாட்சியுடன், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலம், டல்லாஸ் நகரில் தங்கி, சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, பிளோனோ தமிழ் பள்ளி ஆகியவற்றை ராமன்வேலு நடத்தி வருகிறார். இவர்கள் பள்ளியில் தமிழ் கற்றுக் கொடுக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மீது கொண்ட பற்று காரணமாகவும், திருக்குறள் மீதுள்ள ஈர்ப்பு காரணமாகவும் ஒரு திருக்குறள் கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து, ஆண்டுதோறும் போட்டி நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பள்ளியில் 400 மாணவர்கள் திருக்குறள் கற்று வருகின்றனர்.


எதிர்பார்ப்பு

நமது நிருபரிடம், ராமன்வேலு கூறியதாவது:என் மனைவியின் சகோதரி மூலமாக அமெரிக்காவுக்கு 2013ம் ஆண்டு வந்து, ஐ.பி.எம்., நிறுவனத்தில் 'சீனியர் கன்சல்டன்ட்' மற்றும் பல்வேறு நிறுவனங்களில் மனிதவள அதிகாரியாக பணியாற்றினேன்.நாங்கள் நடத்தி வரும் பள்ளியில் 1,330 திருக்குறள்களில் ஒன்றையாவது, பொருளுரையுடன் கூறினால் 1 டாலர் பரிசு என அறிவித்து செயல்படுத்தி வருகிறேன். இது நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது அமெரிக்கா மட்டுமின்றி, உலக அளவில் இந்த போட்டியை நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடையே உருவாகிஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.ராமன்வேலு, 'மனநிறைவுடன் வாழ ஏழு வழிகள்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இவரது மகன், மகள் ஆகியோரும், தந்தை வழியில் தன்னார்வ பணிகள், தமிழ் ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் ராயவரத்தை சேர்ந்த டாக்டர் ராமன்வேலு எழுதிய 'மனநிறைவுடன் வாழ 7 வழிகள்' என்ற புத்தகத்தை அவருடைய மனைவி விசாலாட்சி ஆர்வமுடன் படிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X