சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அபிேஷக நெய் வழங்க கூடுதல் கவுண்டர்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சபரிமலை:அபிேஷக நெய் பக்தர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் நெய்யபிேஷகம் செய்ய கொண்டு செல்ல முடியாது. பக்தர்கள் இருமுடியில் கொண்டு செல்லும் நெய் தேங்காய் ஒன்றுக்கு பத்து ரூபாய் ரசீது எடுத்த பின்னர் அதனை நெய் தேங்காய் பெறும் கவுண்டர்களில் கொடுக்க வேண்டும். இதற்கு பதிலாக

சபரிமலை:அபிேஷக நெய் பக்தர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலையில் பக்தர்கள் நெய்யபிேஷகம் செய்ய கொண்டு செல்ல முடியாது. பக்தர்கள் இருமுடியில் கொண்டு செல்லும் நெய் தேங்காய் ஒன்றுக்கு பத்து ரூபாய் ரசீது எடுத்த பின்னர் அதனை நெய் தேங்காய் பெறும் கவுண்டர்களில் கொடுக்க வேண்டும்.

இதற்கு பதிலாக பக்தர்களுக்கு அபிேஷகம் செய்த நெய் பிரசாதமாக வழங்கப்படும். இதற்காக கோயிலின் வடக்குப்பகுதியிலும், சன்னிதானம் போலீஸ் ஸ்டேஷனின் கீழ் பகுதியிலும் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும் ஒரு கவுண்டர் சன்னிதானம் கோயிலின் பின்புறம் திறக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இந்த மூன்று கவுண்டர்களிலும் நெய் தேங்காய் கொடுத்த பின்னர் பிரசாத நெய் பெற்றுக் கொள்ளலாம்.இதுபோல அப்பம், அரவணை தவிர்த்த அனைத்து பிரசாதத்துக்கான டிக்கெட்டுகள் எல்லா தேவசம் கவுண்டர்களிலும் பெற்றுக் கொள்ளலாம். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பஸ்மகுளத்தில் நேற்று வரை பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X