டில்லியில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் சோதனை: ரூ 400 கோடி கறுப்பு பணம் சிக்கியது

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி,-டில்லியின் 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 400 கோடி ரூபாய் கறுப்பு பணம் சிக்கி உள்ளது.இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் நேற்றைய அறிக்கை:டில்லியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் இரு 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்கள், வருமானத்தை மறைத்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல்

புதுடில்லி,-டில்லியின் 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 400 கோடி ரூபாய் கறுப்பு பணம் சிக்கி உள்ளது.



latest tamil news


இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் நேற்றைய அறிக்கை:டில்லியில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் இரு 'ரியல் எஸ்டேட்' நிறுவனங்கள், வருமானத்தை மறைத்து முறைகேடுகளில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் அந்நிறுவனங்களின் அலுவலகங்களில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டது. சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், வீடுகள் விற்பனை வாயிலாக பெறும் தொகையின் ஒரு பகுதியை ரொக்கமாக வாங்குவதும், அதை கணக்கில் காண்பிக்காமல் மோசடி செய்வதும் உறுதியானது.


latest tamil news


அதேபோல், போலி நிறுவனங்கள் பெயரில் ஆவணங்கள் தயாரித்து வருமானத்தை மறைத்துள்ளதுடன், செலவு கணக்குகளையும் மோசடியாக பராமரித்து உள்ளனர். இந்த வகையில், இரு நிறுவனங்களும் 400 கோடி ரூபாய் வரை கறுப்பு பணமாக பெற்றுள்ளனர். அவர்களிடம் இருந்து 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை தொடர்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
25-நவ-202121:58:25 IST Report Abuse
சீனி வாத்ராவை தாண்டி ஒருவரும் அனுமதி வாங்கி டெல்லியில் அப்பார்ட்மெண்ட் கட்டமுடியாது.
Rate this:
Cancel
25-நவ-202114:00:25 IST Report Abuse
மதுமிதா கறுப்பு இந்த வண்ணம் மிக மிக ஆபத்தான வண்ணம் பிஸினஸில் பிடித்து சேர்ந்த பணம் பிடிக்க வேண்டிய பணம்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
25-நவ-202113:12:37 IST Report Abuse
pattikkaattaan கர்நாடகாவில் டம்மி கழிவறை குழாயில் பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை கத்தை கத்தையாக கைப்பற்றியுள்ளார்கள் .. தொடரட்டும் நடவடிக்கை ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X