ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை பொள்ளாச்சியில் விசாரணை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை பொள்ளாச்சியில் விசாரணை

Added : நவ 25, 2021
Share
பொள்ளாச்சி:பாலக்காட்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, பொள்ளாச்சியில் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.கேரள மாநிலம், பாலக்காடு அருகே, எலப்புள்ளியைச் சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித், 27. கடந்த 15ம் தேதி சஞ்ஜித்தை மர்ம கும்பல் கொலை செய்தது. போலீசார், இரண்டு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குஞ்சிபாளையம்

பொள்ளாச்சி:பாலக்காட்டில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் கொலை தொடர்பாக, பொள்ளாச்சியில் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே, எலப்புள்ளியைச் சேர்ந்தவர் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சஞ்ஜித், 27. கடந்த 15ம் தேதி சஞ்ஜித்தை மர்ம கும்பல் கொலை செய்தது. போலீசார், இரண்டு பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்டம், பொள்ளாச்சி, குஞ்சிபாளையம் பிரிவில் உள்ள இரும்பு குடோனில், கேரள போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.குடோன் உரிமையாளர் முருகானந்தத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

கேரள போலீசார் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரை கொலை செய்த கும்பல், 'மாருதி 800' கார் பயன்படுத்தியது விசாரணையில் தெரிந்தது. கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை செய்ததில், ஏஜன்ட் வாயிலாக, பொள்ளாச்சி, குஞ்சிபாளையம் பிரிவு அருகே உள்ள இரும்பு குடோனில், 15 ஆயிரம் ரூபாய்க்கு காரை விற்றது தெரிந்தது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
முருகானந்தத்திடம் நடத்திய விசாரணையில், காரை வாங்க யாரும் வராததால், காரை உடைத்து எடைக்கு போட்டதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X