பொது செய்தி

இந்தியா

'விமான போக்குவரத்தில் 10 ஆண்டுகளில் முதலிடம்' - மத்திய அமைச்சர் நம்பிக்கை

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா-''இன்னும் 10 ஆண்டுகளில் பயணியர் விமான போக்குவரத்து துறையில் நம் நாடு முதலாவது இடத்தை எட்டிப் பிடிக்கும்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய வர்த்தக சபை கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவர் பேசியதாவது:கடந்த 70 ஆண்டுகளில் நம் நாட்டில் 74 புதிய விமான

கோல்கட்டா-''இன்னும் 10 ஆண்டுகளில் பயணியர் விமான போக்குவரத்து துறையில் நம் நாடு முதலாவது இடத்தை எட்டிப் பிடிக்கும்,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.



latest tamil news


மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய வர்த்தக சபை கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவர் பேசியதாவது:கடந்த 70 ஆண்டுகளில் நம் நாட்டில் 74 புதிய விமான நிலையங்கள் தான் திறக்கப்பட்டன. கடந்த ஏழு ஆண்டுகளில் 62 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டன.

இதையடுத்து நம் நாட்டில் மொத்தம் 136 விமான நிலையங்கள் உள்ளன. இதை 2025க்குள் 220 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 - 19 காலகட்டத்தில் பயணியர் விமான போக்குவரத்தில் நாம் அபார வளர்ச்சி அடைந்துள்ளோம். விமான பயணியரின் எண்ணிக்கையில் ஏழாவது இடத்தில் இருந்த நாம் நான்காவது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். இன்னும் 10 ஆண்டுகளில் முதலாவது இடத்தை நாம் எட்டி பிடிப்போம். இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விமான பயணியரின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் வாயிலாக இந்த வளர்ச்சி சாத்தியப்படும்.அனைத்து 'மெட்ரோ' நகரங்களிலும், இரண்டாவது விமான நிலையம் திறக்க வேண்டிய தேவை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




விமான சேவை சீராகும்!



கொரோனா அச்சுறுத்தலுக்கு பின் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான போக்குவரத்து சேவை தற்போது படிப்படியாக சீராகி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், சர்வதேச பயணியர் விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக சீராகும் என எதிர்பார்க்கிறோம்.

ராஜிவ் பன்சால்செயலர், விமான போக்குவரத்து துறை


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-202111:29:35 IST Report Abuse
aashik ஆளே இல்லாத கடைக்கு, யாருக்குப்பா டி ஆத்தூரே ?
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
25-நவ-202110:30:17 IST Report Abuse
amuthan ஏய் நீ இன்னுமா மந்திரியாக இருக்கிறாய். விமானங்கள் எல்லாம் தனியார் மயம் ஆகிவிட்டது. மந்திரி பதவியையும் தனியாரிடம் கொடுத்து விடவேண்டும்
Rate this:
Cancel
25-நவ-202109:21:46 IST Report Abuse
அப்புசாமி கூண்டோட கட்சி மாறி அமைச்சர் ஆவுற வரைக்கும் டென்ஷனா இருந்தாரு. இப்போ பழையபடி பால் வடியும் முகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X