ரூ.5 கோடி அபராதம் வசூல்
சேலம்:சேலம் ரயில்வே கோட்டத்தில், 24 ஸ்டேஷன்களில் முறையான டிக்கெட் இன்றி பயணிப்பவர், கொரோனா விதியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, முறையான டிக்கெட் இல்லாதது, கூடுதல், 'லக்கேஜ்' உடன் பயணித்த, 87 ஆயிரத்து, 293 பேரிடம், 4.93 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 2,702 பயணியரிடம், 13.51 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் ஆசிரியர் தற்கொலை::
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன், 57. இவர் நேற்று மதியம் 2:00 மணிக்கு பள்ளியில் உள்ள தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் இருந்ததால், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
12 நாளுக்கு பின் ரயில்கள் இயக்கம்
நாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் நான்கு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நவம்பர் 12 முதல், இந்த பாதையில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. ஜே.சி.பி., வாயிலாக மண் அகற்றப்பட்டது. நேற்று அதிகாலை முதல் எர்நாடு எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் இந்த பாதையில் சென்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 30 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டன.க்ஷ
முதல்வருக்கு 2வது டோஸ்
புதுச்சேரி:புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 22ம் தேதி, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். 84 நாட்களுக்கு பின் நேற்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
ரூ.5 கோடி அபராதம் வசூல்
சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், 24 ஸ்டேஷன்களில் முறையான 'டிக்கெட்' இன்றி பயணிப்பவர், கொரோனா விதியை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை, முறையான டிக்கெட் இல்லாதது, கூடுதல், 'லக்கேஜ்' உடன் பயணித்த, 87 ஆயிரத்து, 293 பேரிடம், 4.93 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 2,702 பயணியரிடம், 13.51 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் ஆசிரியர் தற்கொலை
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை -- திருச்சுழி சாலையில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன், 57. இவர் நேற்று மதியம் 2:00 மணிக்கு பள்ளியில் உள்ள தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லை காரணமாக மன உளைச்சலில் இருந்ததால், தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
12 நாளுக்கு பின் ரயில்கள் இயக்கம்
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் நான்கு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் நவம்பர் 12 முதல், இந்த பாதையில் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
ஜே.சி.பி., வாயிலாக மண் அகற்றப்பட்டது. நேற்று அதிகாலை முதல் எர்நாடு எக்ஸ்பிரஸ், பரசுராம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு ஐலண்ட் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் இந்த பாதையில் சென்றன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 30 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டன.
முதல்வருக்கு 2வது 'டோஸ்'
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 22ம் தேதி, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். 84 நாட்களுக்கு பின் நேற்று இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE