சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவன் இறப்பில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் சிறுவன் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், 16 வயது சிறுவன் - சிறுமி. இருவரும் நேற்று முன்தினம் சோமண்டார்குடி கோமுகி ஆற்றங்கரை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.இறந்த சிறுவனின் தாத்தா சீனுவாசன்,
 சிறுவன் இறப்பில் சந்தேகம்: உறவினர்கள் மறியல்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் சிறுவன் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரி, கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், 16 வயது சிறுவன் - சிறுமி. இருவரும் நேற்று முன்தினம் சோமண்டார்குடி கோமுகி ஆற்றங்கரை அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.இறந்த சிறுவனின் தாத்தா சீனுவாசன், பாட்டி மரகதம் உட்பட 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை மனு அளிப்பதற்காக கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
'சிறுவனின் உடலில் காயங்கள் உள்ளன. இறப்பில் மர்மம் இருக்கிறது' என கூறி, கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்தனர்.'இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். மருத்துவ குழுவினர் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் முன் கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, மறியலை கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X