தலைமறைவாகவில்லை: விரைவில் மும்பை திரும்புவேன்: மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் பேட்டி

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மும்பை: நான் தலைமறைவாகவில்லை சண்டிகரில் தான் உள்ளேன் என மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையி்ல் தொழிலதிபர் அம்பானி வீட்டருகே வெடிபொருள் கார் நிறுத்திய விவகாரத்தில், போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பரம்வீர் சிங் மீது மதுபான விடுதி உரிமையாளரை மிரட்டி, 9 லட்சம் ரூபாய் பணம்
 தலைமறைவாகவில்லை,மும்பை திரும்புவேன், மாஜி போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் பேட்டி

மும்பை: நான் தலைமறைவாகவில்லை சண்டிகரில் தான் உள்ளேன் என மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையி்ல் தொழிலதிபர் அம்பானி வீட்டருகே வெடிபொருள் கார் நிறுத்திய விவகாரத்தில், போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங், பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பரம்வீர் சிங் மீது மதுபான விடுதி உரிமையாளரை மிரட்டி, 9 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. அவர் தலைமறைவானார்.


latest tamil news




போலீசின் கோரிக்கையை ஏற்று, பரம்வீர் சிங் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. தன் மீதான கைது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பரம்வீர் சிங் சார்பில் மனுவை கடந்த 18-ம் தேதி விசாரித்த நீதிபதிகள் அவர் இருக்கும் இடம் தெரியும் வரை, இந்த மனுவை விசாரிக்க முடியாது. 22ம் தேதிக்குள் அந்த தகவலை அளிக்க வேண்டும் என மனுவை தள்ளுபடி செய்தனர்
இந்நிலையில் நேற்று டி.வி.சேனல் ஒன்றிற்கு அலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், நான் தலைமறைவாக வாழ வில்லை. சண்டிகரில் தான் உள்ளேன். விரைவில் மும்பை சென்று விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-நவ-202112:56:34 IST Report Abuse
M  Ramachandran அப்போர் ஏஆர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வந்து ஆஜராகவில்லை. அரசியல் பின்புலம் இருப்பதின் தீவிரம் தெரிகிறது.தாக்கரே குடும்பம் என்றால் அடுத்த தீவிர வாத கும்பல். மும்பையில் தமிழர்களாய் படாதத பாடு படுத்திய கும்பல். கூலி வேலை செய்த அப்பாவி பீகாரிகளிய் உத்ர பிரேதேசத்திலிருந்து வந்த வர்களய் விரட்டி அடித்த கும்பல்.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
25-நவ-202111:06:30 IST Report Abuse
Indhuindian தலைமறையாகவில்லை உங்க கண்ல படாம கொஞ்சநாளைக்கு தனியா இருந்தேன் அவ்வளோதான் இப்பதான் கோர்ட் சொல்லிடுச்சே என்ன கைது பண்ண முடியாதுன்னு அதனாலே சுதந்திரமா இருக்கலாமனு வந்துட்டேன் அம்புட்டுதான்
Rate this:
Cancel
25-நவ-202108:50:12 IST Report Abuse
அப்புசாமி உச்ச நீதிமன்றத்தில் சரணடைஞ்சுடுங்க. கைதிலிருந்து காப்பாத்திருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X