சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூர் மாணவி விவகாரம் ஆசிரியர் தற்கொலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருச்சி:கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் அதே பள்ளியின் கணித ஆசிரியர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.கரூரைச் சேர்ந்தவர் சரவணன் 44. இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கரூரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் சரவணன் நேற்று மாலை 4:00 மணிக்கு திருச்சி

திருச்சி:கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் அதே பள்ளியின் கணித ஆசிரியர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.
கரூரைச் சேர்ந்தவர் சரவணன் 44. இவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கரூரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் சரவணன் நேற்று மாலை 4:00 மணிக்கு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தன் மாமனார் வீட்டில் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
துறையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் டைரி ஒன்றை கைப்பற்றினர். அதில் மாணவி தற்கொலை விவகாரத்தில் மாணவர்கள் தன்னை தொடர்புபடுத்தி பேசிய அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X