சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:அரியலுார் அருகே, இரு மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டார்.அரியலுார் மாவட்டம், காட்டுபிரிங்கியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருள்செல்வன், 35, என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 10ம் வகுப்பு
 மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது

பெரம்பலுார்:அரியலுார் அருகே, இரு மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியையும் கைது செய்யப்பட்டார்.
அரியலுார் மாவட்டம், காட்டுபிரிங்கியம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அருள்செல்வன், 35, என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.அந்த மாணவி, தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, 53, என்பவரிடம் தெரிவித்துள்ளார்.

அவர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும், அருள்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மாணவி கொடுத்த புகாரில், மாணவி மற்றும் அருள்செல்வன் ஆகியோரை அழைத்துப் பேசிய தலைமை ஆசிரியை, 'இதை பெரிதுபடுத்த வேண்டாம்' என, கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள், பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியர் மீதும், சம்பவத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
அரியலுார் போலீசார், அருள்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.ஆசிரியர் இடமாற்றம்விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி வணிகவியல் முதுகலை ஆசிரியர் பழனிவேல், 44. இவர் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவரிடம், வகுப்பறையில் அநாகரீகமாக பேசியுள்ளார்.
இது குறித்த புகாரை, கோட்டக்குப்பம் மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர். தற்போது பழனிவேல், செஞ்சி கல்வி மாவட்டம், கீழ்மாம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


மாணவர்கள் கைது@


@


கரூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி, 'தற்கொலைக்கு பாலியல் தொந்தரவே காரணம்' என கடிதம் எழுதி வைத்து, 19ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பாலியல் தொந்தரவு கொடுத்த நபரின் பெயரை மாணவி குறிப்பிடாததால் தனிப்படை போலீசார், குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 9:30 மணிக்கு, கரூர் அரசு கலைக் கல்லுாரி மற்றும் பல்வேறு தனியார் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், 'மாணவி தற்கொலை வழக்கில் உரிய நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்' எனக் கோரி, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது. போலீசார் மறியலில் ஈடுபட்ட, 70க்கும் மேற்பட்ட மாணவர்களை கைது செய்து, நகராட்சி திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். மதியம், 2:00 மணிக்கு விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X