இந்தியா

'டாடி ஆறுமுகம்' மகன் முன்ஜாமின் கேட்டு மனு

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி:'டாடி ஆறுமுகம்' மகன் உள்ளிட்ட மூவர், முன்ஜாமின் கேட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற யு டியூப் சேனல் நடத்தி வருபவர் டாடி ஆறுமுகம். இவர், புதுச்சேரியில் 'டாடி ஆறுமுகம் பிரியாணி' என்ற உணவகம் நடத்தி வருகிறார்.இவரது மகன் கோபிநாத், 33 உட்பட ஐந்து பேர், 21ம் தேதி இரவு புதுச்சேரி ஏ.கே. டார்வின் ஓட்டலுக்கு

புதுச்சேரி:'டாடி ஆறுமுகம்' மகன் உள்ளிட்ட மூவர், முன்ஜாமின் கேட்டு புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற யு டியூப் சேனல் நடத்தி வருபவர் டாடி ஆறுமுகம். இவர், புதுச்சேரியில் 'டாடி ஆறுமுகம் பிரியாணி' என்ற உணவகம் நடத்தி வருகிறார்.இவரது மகன் கோபிநாத், 33 உட்பட ஐந்து பேர், 21ம் தேதி இரவு புதுச்சேரி ஏ.கே. டார்வின் ஓட்டலுக்கு சென்றனர்.
அங்குள்ள பாரில் மது குடித்து, பாரை அடித்து நொறுக்கியதில், ஊழியர் ஜார்ஜஸ் சினாஸ் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. முத்தியால்பேட்டை போலீசார், ஐந்து பேர் மீதும் வழக்கு பதிந்து இருவரை கைது செய்தனர். கோபிநாத் உள்ளிட்ட மூவரை தேடி வருகின்றனர். கோபிநாத் உள்ளிட்ட மூவரும் நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X