சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓடும் காரில் பெண்ணிடம் சில்மிஷம் போதை வாலிபர் கைது; இருவருக்கு வலை

Added : நவ 25, 2021
Share
Advertisement
நுங்கம்பாக்கம்:ஓடும் காரில் பெண்ணிடம் மதுபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம் 24. நேற்று முன்தினம் இரவு நண்பர்களான தீபக் சக்தி ஆகிய இருவருடன் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு மது விருந்திற்கு சென்றார்.அங்கு நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்தபோது

நுங்கம்பாக்கம்:ஓடும் காரில் பெண்ணிடம் மதுபோதையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட மூவரில் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.
துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கவுதம் 24. நேற்று முன்தினம் இரவு நண்பர்களான தீபக் சக்தி ஆகிய இருவருடன் தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு மது விருந்திற்கு சென்றார்.அங்கு நண்பர்களுடன் நடனமாடி கொண்டிருந்தபோது வேளச்சேரியைச் சேர்ந்த 29 வயது பெண்ணும் சேர்ந்து நடனமாடினார்.
தொடர்ந்து இரவு கவுதமும் அவரது நண்பர்களும் பெண்ணிடம் காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுகிறோம் எனக்கூறி அழைத்தச் சென்றனர்.கார் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் சென்றபோது மதுபோதையில் இருந்த மூவரும் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனே அப்பெண் காப்பாற்றக் கோரி சத்தம் போட்டார்.இதை கேட்ட இலங்கை துாதரக பாதுகாப்பு போலீசார் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அப்போது கவுதம் போலீசாரிடம் சிக்கிக்கொள்ள மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
பின் நுங்கம்பாக்கம் போலீசாரை வரவழைத்து துாதரக பாதுகாப்பு போலீசார் கவுதமை ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X