சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி முதல்வருக்கு நிபந்தனை ஜாமின்

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாணவி தற்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.கோவையைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, 35, கைது செய்யப்பட்டார். மாணவி புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா

கோவை:கோவை மாணவி தற்கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி, சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, 35, கைது செய்யப்பட்டார். மாணவி புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.
அவர் தாக்கல் செய்த ஜாமின் மனு, கோவை 'போக்சோ' நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஆர்.எஸ்.புரம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
இறந்த மாணவியின் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X