பொது செய்தி

இந்தியா

நொய்டா சர்வதேச விமான நிலையம் ரூ.8914 கோடியில் முதல் கட்ட பணிகள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கான முதல் கட்ட பணிகள் 8914 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சமமாக உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவின் ஜீவாரில் 1,300 ஏக்கரில்29 ஆயிரத்து, 5600கோடி ரூபாயில் சர்வதேச விமான நிலைய அமைக்க முடிவு

புதுடில்லி:உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைய உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கான முதல் கட்ட பணிகள் 8914 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு சமமாக உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவின் ஜீவாரில் 1,300 ஏக்கரில்29 ஆயிரத்து, 5600கோடி ரூபாயில் சர்வதேச விமான நிலைய அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் முதல் கட்ட பணிகள், 8, 914 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில் உத்தர பிரதேச அரசின் பங்கு 4,326 கோடி ரூபாய். முதல் கட்ட பணிகள் முடிந்து, விமான நிலையம், 2024 செப்டம்பரில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, விமான நிலையம், ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி பயனாளிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். நான்கு கட்ட பணிகள் முடிந்த பின் ஏழு கோடிக்கும் அதிகமான பயணியருக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த விமான நிலையத்தால், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்த பின் ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் உள்ள ஒரே மாநிலமாக, உத்தர பிரதேசம் இருக்கும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X