பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்பாட் புக்கிங் கவுண்டர் நிலை என்ன அறிக்கை கோரிய கேரள உயர்நீதிமன்றம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சபரிமலை:ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் நிலை என்ன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும் படி ஸ்பெஷல் கமிஷனருக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தினமும் அனுமதி வழங்கப்படுகிறது.இதற்கான முன்பதிவுகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் பக்தர்களுக்காக நிலக்கல், எருமேலி உள்ளிட்ட 10

சபரிமலை:ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் நிலை என்ன என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்யும் படி ஸ்பெஷல் கமிஷனருக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பக்தர்களுக்கு தினமும் அனுமதி வழங்கப்படுகிறது.இதற்கான முன்பதிவுகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் பக்தர்களுக்காக நிலக்கல், எருமேலி உள்ளிட்ட 10 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

போட்டோ, ஆதார் கார்டுடன் சென்று முன்பதிவு செய்த பின்னர் பக்தர்கள் சன்னிதானம் செல்லலாம். எனினும் இந்த வசதியை பெரிய அளவில் பக்தர்கள் பயன்படுத்த வில்லை. ஆன்லைன் முன்பதிவு உரிமையை கேரள போலீசிடம் இருந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு வழங்க கேட்டு தொடரப்பட்ட வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர், ஸ்பாட் புக்கிங் கவுண்டர்களின் நிலை என்ன என்பது பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் படி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவ. 26க்கு மாற்றி வைத்தனர்.இதற்கிடையில் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களில் பல பகுதிகளில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்வது பற்றி கேரள போலீசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X