பொது செய்தி

இந்தியா

'பெகாசஸ்' மென்பொருள் தயாரித்த என்.எஸ்.ஓ.,வுக்கு எதிராக 'ஆப்பிள்' மனு

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:'ஆப்பிள்' நிறுவனத்தின் மென்பொருள்கள், சேவைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்த, இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்க கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில், 'ஆப்பிள்' நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனம், 'பெகாசஸ்' என்ற உளவு மென்பொருளை தயாரித்து வருகிறது.இந்த மென்பொருளை ஒருவரது, 'மொபைல்
 'பெகாசஸ்' மென்பொருள் தயாரித்த என்.எஸ்.ஓ.,வுக்கு எதிராக 'ஆப்பிள்' மனு

புதுடில்லி:'ஆப்பிள்' நிறுவனத்தின் மென்பொருள்கள், சேவைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்த, இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்க கோரி, அமெரிக்க நீதிமன்றத்தில், 'ஆப்பிள்' நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனம், 'பெகாசஸ்' என்ற உளவு மென்பொருளை தயாரித்து வருகிறது.இந்த மென்பொருளை ஒருவரது, 'மொபைல் போனில்' நிறுவுவதன் வாயிலாக அவரது தொலைபேசி உரையாடல்கள், 'இ - மெயில், வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் உளவு பார்க்க முடியும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி பல்வேறு நாட்டு அரசுகளும் உளவு பார்த்து வருகின்றன. இந்நிலையில், நம் நாட்டை சேர்ந்த எதிர்கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகளின் மொபைல் போன்களில் பெகாசஸ் மென்பொருளை ஊடுருவ செய்து மத்திய அரசு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பார்லி., மழைகால கூட்டத்தொடரின் போது இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது.இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்கவும், இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், என்.எஸ்.ஓ., நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில், 'ஆப்பிள்' நிறுவனம்மனு தாக்கல் செய்துள்ளது.அதன் விபரம்:உலகம் முழுதும் 165 கோடி, 'ஐ - போன்கள்' பயன்பாட்டில் உள்ளன.
இந்த ஐ - போன்களில் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனம், 'பெகாசஸ்'மென்பொருளை ஊடுருவ செய்து பயனாளர்களை உளவு பார்க்கும்அபாயம் உள்ளது.எனவே, 'ஆப்பிள்' நிறுவனத்தின் மென்பொருள்கள், சேவைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்த என்.எஸ்.ஓ., நிறுவனத்துக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2018ல் 17 லட்சம், ஐ - போன்கள் நம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை 2020ல் 32 லட்சமாக அதிகரித்தது.'ஆண்ட்ராய்டு' உள்ளிட்டஇதர மென்பொருட்களை காட்டிலும், ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை பெகாசஸ் வைரஸ் எளிதில் ஊடுருவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X