சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு சங்கத்தில் ரூ.33 லட்சம் கையாடல் முன்னாள் செயலாளர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் கூட்டுறவு சங்கத்தில் 33 லட்சத்து 8 ஆயிரத்து 362 ரூபாய் கையாடல் செய்ததாக அதன் முன்னாள் செயலரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரத்தில் மாவட்ட வருவாய்த்துறை கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் செயலராக ராமநாதபுரம் வெளிப்பட்டணம் செல்லப்பெருமாள் கோவில் தெரு ராஜா 57, பணியாற்றினார். 2016 ஆக.2 முதல் 2018 அக்.17 வரை இவர் பணியில் இருந்த
 கூட்டுறவு சங்கத்தில் ரூ.33 லட்சம் கையாடல்  முன்னாள் செயலாளர் கைது

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கூட்டுறவு சங்கத்தில் 33 லட்சத்து 8 ஆயிரத்து 362 ரூபாய் கையாடல் செய்ததாக அதன் முன்னாள் செயலரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் மாவட்ட வருவாய்த்துறை கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் செயலராக ராமநாதபுரம் வெளிப்பட்டணம் செல்லப்பெருமாள் கோவில் தெரு ராஜா 57, பணியாற்றினார். 2016 ஆக.2 முதல் 2018 அக்.17 வரை இவர் பணியில் இருந்த காலத்தில்சங்கத்தில் கடன் பெற்ற 12 பேரிடம் கடன் தொகையை ரொக்கமாக திரும்ப பெற்றுள்ளார்.

அதன்படி 33 லட்சத்து 8 ஆயிரத்து 362 ரூபாயை வசூலித்து அதனை சங்க தினசரி பதிவேட்டில்வரவு வைக்காமல் லெட்ஜரில் மட்டும் வரவு வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார். இதனால் ராமநாதபுரம் கூட்டுறவு துணைப்பதிவாளர் கோவிந்தராஜன், இவரை பணி நீக்கம் செய்தார். ராமநாதபுரம்வணிகவியல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் இளவேனில், ராஜாவை நேற்று கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X