முதல்வரிடம் கேள்வி எழுப்பிய ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
அகர்தலா:திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக, முதல்வரிடம் ஆளும் கட்சியான பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் இருவர் கேள்வி எழுப்பி உள்ளனர்.திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம் மாநில உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சமீபத்தில் கலவரங்கள் நடந்தன. இதில் உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய நடவடிக்கை எடுக்க

அகர்தலா:திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பாக, முதல்வரிடம் ஆளும் கட்சியான பா.ஜ., -- எம்.எல்.ஏ.,க்கள் இருவர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேப் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம் மாநில உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சமீபத்தில் கலவரங்கள் நடந்தன. இதில் உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூறினர்.
அம்மாநில பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சுதீப் ராய் பர்மன் மற்றும் ஆசிஷ் சாஹா கூறியதாவது; திரிபுரா மக்கள் தேர்தலை எப்போதும் பண்டிகை போல் பார்ப்பார்கள். ஆனால் இந்த முறை தேர்தல் பயங்கரவாதிகளின் கைகளுக்குள் சென்றுவிட்டதுமார்க்சிஸ்ட் ஆட்சியில் இங்கு அரசியல் வன்முறை கலாசாரம் மேலோங்கி இருந்தது.
இப்போது அது ஜனநாயக விரோத அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பா.ஜ., தன் 44 மாத ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளது. பின் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அதற்கு வன்முறை ஏன் தேவையாக இருக்கிறது.வன்முறை தொடர்பாக உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருப்பது ஏன் என தெரியவில்லை. எனவே இப்பிரச்னையில் உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X