இந்தியா

ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பரவல் வேகம்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜெனிவா :ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்து உள்ளதுடன், பரவல் அதிகமுள்ள பகுதியாக மாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான, உலகளாவிய மதிப்பீடு நேற்று முன்தினம் வெளியானது. இதில் சர்வதேச அளவில் கொரோனா பரவல் மற்றும் இறப்புகள் 6 சதவீதம் அதிரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. கடந்த வாரம் 36
ஐரோப்பிய நாடு, கொரோனா, பரவல், வேகம்,

ஜெனிவா :ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்து உள்ளதுடன், பரவல் அதிகமுள்ள பகுதியாக மாறியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது.

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான, உலகளாவிய மதிப்பீடு நேற்று முன்தினம் வெளியானது. இதில் சர்வதேச அளவில் கொரோனா பரவல் மற்றும் இறப்புகள் 6 சதவீதம் அதிரித்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறி உள்ளது. கடந்த வாரம் 36 லட்சம் பேரிடம் தொற்று உறுதியானதுடன் ஐரோப்பிய நாடுகளில் பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்து உள்ளது.


latest tamil news


இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியதாவது: உலக அளவில் கொரோனா பரவல் மற்றும் இறப்புகள் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் வைரஸ் பரவல் 11 சதவீதம் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதியில் இருந்து பாதிப்பு அதிகரிக்கும் ஒரே பகுதியாக ஐரோப்பிய நாடுகள் உள்ளன.

எனவே அவசர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளா விடில், எதிர்வரும் மூன்று மாதங்களில் ஏழு லட்சம் பேர் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம். ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்த வேண்டும். முக கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக்கினால் மட்டுமே அடுத்த ஊரடங்கை தவிர்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
25-நவ-202109:36:21 IST Report Abuse
Sampath Kumar நான் அன்றய பதிவிட்டேன் இன்று நடக்கிறது இன்னமும் காரோண அலை இல்லை என்றும் சொல்லும் அறிவீலிகள் கூற்றை ஒதுக்கிவிட்டு இந்தியா பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்காவிட்டால் நாடு நாசமாவது உறுதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X