கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளை மூடக்கோரிய வழக்கு முடிக்கப்பட்டது

Added : நவ 25, 2021
Share
Advertisement
மதுரை:திருநெல்வேலி வழக்கறிஞர் அப்துல் வகாபுதீன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: \கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வியை தொடர ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.,1 முதல் நேரடி வகுப்புகளை துவங்க தமிழக அரசு அனுமதித்தது. கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது.ஒன்பதாம் வகுப்பு

மதுரை:திருநெல்வேலி வழக்கறிஞர் அப்துல் வகாபுதீன் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: \
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வியை தொடர ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.,1 முதல் நேரடி வகுப்புகளை துவங்க தமிழக அரசு அனுமதித்தது. கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது.
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 விற்கு நேரடி வகுப்பு நடத்துவதற்கு பதிலாக மீண்டும் பள்ளிகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு அனைத்துப் பள்ளிகளும் நவ.,1 முதல் திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள், இவ்வழக்கு காலாவதியாகிவிட்டது. வழக்கு முடிக்கப்படுகிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X