கர்நாடகாவில் ஊழல் : தங்க நகைகள் ரொக்கம் பறிமுதல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவின் 15 ஊழல் அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் 503 அதிகாரிகள் கொண்ட ஊழல் ஒழிப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத கிலோ கணக்கில் தங்க நகைகள் ரொக்கம் பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கர்நாடகாவில் பல துறை அரசு அதிகாரிகள் மீது ஏ.சி.பி. எனும் ஊழல் ஒழிப்பு படைக்கு லஞ்ச புகார்கள் வந்து கொண்ட வண்ணம் இருந்தன. அதில்
 கர்நாடகாவில் ஊழல் : தங்க நகைகள் ரொக்கம் பறிமுதல்

பெங்களூரு:கர்நாடகாவின் 15 ஊழல் அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் 503 அதிகாரிகள் கொண்ட ஊழல் ஒழிப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத கிலோ கணக்கில் தங்க நகைகள் ரொக்கம் பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகாவில் பல துறை அரசு அதிகாரிகள் மீது ஏ.சி.பி. எனும் ஊழல் ஒழிப்பு படைக்கு லஞ்ச புகார்கள் வந்து கொண்ட வண்ணம் இருந்தன. அதில் அதிக லஞ்சம் வாங்கிய 15 அதிகாரிகளின் பட்டியலை ஏ.சி.பி. தயாரித்தது.இதையடுத்து பெங்களூரு, கலபுரகி, கதக் மண்டியா, மங்களூரு, பல்லாரி, பெலகாவி என 15 அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் நேற்று ஒரே நாளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஏ.சி.பி.யின் 15 எஸ்.பி.க்கள் 100 அதிகாரிகள் 403 ஊழியர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை துவங்கிய சோதனை நள்ளிரவு வரை தொடர்ந்தது.இதில் கதக் மாவட்ட விவசாய இணை இயக்குனர் ருத்ரேஷப்பாவுக்கு சொந்தமான ஷிவமொகாவின் 5 இடங்களில் 44 அதிகாரிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தினர்.ஷிவமொகாவில் இரண்டு வீடுகள் நான்கு வீட்டு மனைகள் 9 கிலோ தங்க நகைகள் தங்க பிஸ்கட்கள் 3 கிலோ வெள்ளி பொருட்கள் விலை உயர்ந்த வீட்டு உபயோக பொருட்கள் சிக்கின. அதுபோல பல அதிகாரிகளிடம் கணக்கில் காட்டப்படாத நிரந்தர வைப்பு தொகைக்கான பத்திரங்கள் நில ஆவணங்களும் கண்டு பிடிக்கப்பட்டன.கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகா பொதுப்பணித்துறை ஜூனியர் பொறியாளர் பிராதரின் குப்பி காலனி வீட்டுக்கு நேற்று காலை 7:00 மணிக்கு ஏ.சி.பி. அதிகாரிகள் வந்தனர். நீண்ட நேரம் கதவு தட்டியும் திறக்கப்படவில்லை.பின் திறந்த போது கதவை உடனடியாக திறக்காததற்கு அதிகாரிகள் காரணம் கேட்டு விசாரித்தனர். அப்போது தான் ரொக்க பணத்தை தண்ணீர் குழாய் வீட்டு கூரை சேலைகளில் அவர்கள் பதுக்கி வைத்தனர் என்பது தெரிந்தது.இதையடுத்து 'பிளம்பரை' வரவழைத்து குழாயை அறுத்து பார்த்த போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் கட்டுகட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. வீட்டு கூரை சேலைகள் பக்கெட்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் கைப்பற்றப்பட்டது.தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X