கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கட்டட வரைபட பொறியாளர் பதிவுகுழு வழிகாட்டுதல் உருவாக்க வழக்கு

Added : நவ 25, 2021
Share
Advertisement
மதுரை:கட்டட அனுமதி வரைபடம் தயாரிக்கும் பொறியாளர்கள் பதிவு செய்ய அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் தகுதி காண் குழு அமைக்க வழிகாட்டுதல் பிறப்பிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது.கோவில்பட்டி மதிவாணன் தாக்கல் செய்த பொதுநல மனு:நான் கோவில்பட்டி நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர். தமிழ்நாடு

மதுரை:கட்டட அனுமதி வரைபடம் தயாரிக்கும் பொறியாளர்கள் பதிவு செய்ய அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் தகுதி காண் குழு அமைக்க வழிகாட்டுதல் பிறப்பிக்க தாக்கலான வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் அளித்தது.
கோவில்பட்டி மதிவாணன் தாக்கல் செய்த பொதுநல மனு:நான் கோவில்பட்டி நகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள், உள்ளாட்சி அமைப்புகள் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து 2019ல் நகராட்சி நிர்வாக கமிஷனர் சுற்றறிக்கை வெளியிட்டார்.பதிவு பெற்ற கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர், தரத் தணிக்கையாளர், நகரமைப்பு வல்லுநர், அபிவிருத்தியாளர் (டெவலப்பர்) ஆகிய தொழில் சார்ந்த வல்லுநர்கள் மாநகராட்சி, நகராட்சியில் பதிவு செய்ய தகுதிகாண் குழுவிடம் சான்று பெற வேண்டும்.
மாநகராட்சிகளில் செயற்பொறியாளர் (திட்டம்), நகராட்சிகளில் கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உரிய அடையாள அட்டை, ஆதார் மற்றும் போட்டோவுடன் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். யாரும் தவறு செய்தால் பதிவை ரத்து செய்ய வேண்டும். அதை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என அறிவிப்பில் உள்ளது.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. கட்டட அனுமதிக்கான வரைபடம் தயாரிக்கும் பொறியாளர்கள் பதிவு செய்ய அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் தகுதி காண் குழு அமைக்க வழிகாட்டுதல்கள் பிறப்பிக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மதிவாணன் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு: நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என தெரிவித்தது. நீதிபதிகள் ஜன.,4 க்கு ஒத்திவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X