பொது செய்தி

தமிழ்நாடு

கோவிட்டால் பாதிக்கப்பட்ட கமல் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: 'நடிகர் கமலின் உடல்நிலை சீராக உள்ளது; நலமாக உள்ளார்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கமல் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப, ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல், 67, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தற்போது, உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை: 'நடிகர் கமலின் உடல்நிலை சீராக உள்ளது; நலமாக உள்ளார்' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கமல் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப, ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல், 67, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



latest tamil news


தற்போது, உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'கமலின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாக உள்ளார்' எனக் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், கமல் உடல் நலம் பெற, அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவில் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


latest tamil news


கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் கூறுகையில், ''என் தந்தையின் ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் பிரார்த்தனைக்கு நன்றி. அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில், உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளார்,'' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
25-நவ-202114:43:32 IST Report Abuse
Vena Suna இங்கே கொரோனாவை அமெரிக்கா போய் திரும்பவும் கொண்டு வந்து விட்டாரே..அடடா
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
25-நவ-202114:29:51 IST Report Abuse
Vena Suna இவரை காப்பாற்று.
Rate this:
Cancel
Vinoth SETHURAMAN - Singapore,இந்தியா
25-நவ-202112:42:21 IST Report Abuse
Vinoth SETHURAMAN அவருக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லையே. கடவுள் நம்பிக்கை கூடாதுன்னு தானே சொல்றாரு. அப்புறம் என்னத்துக்கு யா அவருக்காக கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்றீங்க. திரும்பி வந்தோன்ன மருத்துவத்தின் முயற்சியால் நலமடைந்தேன்னு சொல்லப்போறாரு. ..என்னத்த சொல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X