கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஈஷாவுக்கு 'சம்மன்' ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை-கோவை ஈஷா மையத்துக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.கோவை வெள்ளியங்கிரியில் ஈஷா மையம் உள்ளது. தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், இந்த மையத்துக்கு எதிரான புகாரை விசாரணைக்கு எடுத்து சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மையத்தின் நிர்வாகி மனு தாக்கல்

சென்னை-கோவை ஈஷா மையத்துக்கு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.



latest tamil news


கோவை வெள்ளியங்கிரியில் ஈஷா மையம் உள்ளது. தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன், இந்த மையத்துக்கு எதிரான புகாரை விசாரணைக்கு எடுத்து சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மையத்தின் நிர்வாகி மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'குழந்தைகளுக்கு அடிப்படை பயிற்சியும், குருகுல கல்வி முறையும் அளிக்கப்படுகிறது. 'சம்மன் கிடைத்த உடன், குறிப்பிட்ட தேதியில் கமிஷனை நிர்வாகி அணுகினார்; எங்கள் தரப்பை கேட்கவில்லை. அதனால், திரும்பிவிட்டார். எங்கள் தரப்பை கேட்க அவர்கள் தயாராக இல்லை' என்று கூறப்பட்டுள்ளது.


latest tamil news


மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நிலையிலேயே, நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி உள்ளார். அதிகாரிகள் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் தரப்பை நிரூபிக்க வேண்டும்.எனவே, மனுதாரர் ஆஜராகி விளக்கம் அளிக்க ஏதுவாக, நான்கு வாரங்களில் புதிதாக சம்மன் அனுப்ப, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனுக்கு உத்தரவிடப்படுகிறது. சம்மன் கிடைத்த பின், இரண்டு வாரங்களில் மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும். உரிய சந்தர்ப்பம் வழங்கி விசாரணை நடத்தி, எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை கமிஷன் பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
25-நவ-202114:55:04 IST Report Abuse
Samathuvan இது மாதிரி நிறைய ஆளுங்க, முதலில் சந்யாசம் என்பான் அப்புறம் ஆன்மீகம் சொல்லித்தறேன்னு ஒரு கூட்டத்தை கூட்டுவான் கொஞ்சம் பாப்புலர் ஆனவுடன் ஆசிரமங்க்ர பேர்ல ஆரம்பித்து, அறக்கட்டளைன்னு பேருல ஆட்டயப்போட்டதை மறச்சு வேணுங்கறத செய்வான். இதை நம்பி மக்கள் எச்சில் கையால் ஈ ஒட்டாதவன், பெற்றோருக்கு பணிவிடை செய்யாதவன் கூட அவன்கிட்ட போய் பணத்தையும், கற்பையும் கொடுத்துட்டு குய்யோ முய்யோ கதறுவான். கடைசியில அரசு இதுல தலையிட்டு தீர்த்துவைக்கணும்பான், அப்படியே தலையிட்டால் இந்த அரசு காழ்ப்புணர்வுல செய்யுதும்பான். நாட்டிலேயே நல்ல வருமானம் வருகிற தொழில் ஒன்னு எலிமெண்டரி ஸ்கூல் நடத்துவது அல்லது இது போல ஆசிரம தொழில் இதுலதான் எந்த கவெர்மென்டும் கைவைக்காதுன்னு இந்த ஆளுங்களுக்கு தெரியும். மனிதனை மதிக்க வேண்டும் ஆனால் தொழக்கூடாது. எந்த பின்புலமும் தெரியாத வேடதாரிகள் செய்வதை எல்லாம் வேதா வாக்காக எடுக்கக்கூடாது இல்லையென்றால், பின் விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
25-நவ-202114:27:46 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் ////ஹிந்து வேத🙏 பாடசாலை மற்றும் பராம்பரிய பள்ளிகளை நடத்தவும் உரிமையுண்டு/// ஆரூர் ரங்குடு... யார் இல்லென்னு சொன்னாங்க... உங்களுக்கு தெரியுமா..ன்னு எனக்கு தெரியலை? காஞ்சிபுரத்தில் சங்கர மடத்தின் சார்பில்... காமாட்சி அம்மன் தெற்கு கோபுர வாசல் உள்ள கோலாசத்திர வீதியில், வேதபாடசாலை, தேனம்பாக்கத்தில் வேதபாடசாலை போன்று “நகரேஷு காஞ்சி” என்று வேத காலத்தில் போற்றப்பட்ட காஞ்சிபுரத்தில் தொண்டை மண்டல ஆதீனத்தின் சார்பிலும் பல தொன்மையான.. அதாவது நூற்றாண்டுக்கு மேலாக செயல்பட்டு வரும் வேத பாடசாலைகள் இயங்கி வருகின்றன... அந்த வேதபாட சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை... இதுக்கு மட்டும் நோட்டீஸ் கொடுத்துருக்காங்கன்னா... எதுக்கு?...ன்னு யோசிக்க மாட்டேளா...? ஆரூர் ரங்குடு...? அதுமட்டுமல்ல... நீங்க மகா பெரியவரான சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளை பார்த்திருப்பீங்க...ன்னு நினைக்குறேன்.... அதைப்போல... ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளையும், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் பார்த்திருப்பீர்கள் என நினைக்குறேன்... இவர்கள் கஷாயம் கட்டிட்டு, தண்டம் கைல வச்சுட்டு... முனிவர்களாய் வலம் வந்தவர்கள்...?
Rate this:
Cancel
Harsha Jack - Tamilnadu,இந்தியா
25-நவ-202113:52:10 IST Report Abuse
Harsha Jack கருத்து தெரிவிக்கும் அனைவரும் செய்தியை விமர்சிக்காமல் மற்றவற்றை விமர்சிக்கிறார்களே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X