பொது செய்தி

இந்தியா

பாகூரில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
பாகூர் : பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், பாகூர் சிவன் கோவில் அருகே கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் வரவேற்றார். எதிர்க் கட்சித் தலைவர் சிவா தலைமைதாங்கி, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.இந்த அலுவலகத்தில், உள்ள ஒவ்வொரு அரங்கிற்கும் பாகூர், குருவிநத்தம். ஒருங்கிணைந்த தொகுதியில் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு
 பாகூரில் எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு

பாகூர் : பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், பாகூர் சிவன் கோவில் அருகே கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் வரவேற்றார். எதிர்க் கட்சித் தலைவர் சிவா தலைமைதாங்கி, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.இந்த அலுவலகத்தில், உள்ள ஒவ்வொரு அரங்கிற்கும் பாகூர், குருவிநத்தம்.
ஒருங்கிணைந்த தொகுதியில் எம்.எல்.ஏ.,க்களாக தேர்வு செய்யப்பட்டவர்களை நினைவு கூரும் வகையில் பெயர்கள்சூட்டப்பட்டுள்ளது.அதன்படி, எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு தியாகி சுப்ரமணிய படையாச்சி, அலுவலக அறைக்கு தியாகி தங்கவேல் கிளமென்ட்சோ, கலந்தாய்வு கூடத்திற்கு ஆர்.எல். புருஷோத்தமன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் பாகூரை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் குப்புசாமி பெயரில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. விழாவில், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X