பொது செய்தி

தமிழ்நாடு

த.மு.மு.க.,

Added : நவ 25, 2021
Share
Advertisement
மண்ணடி : சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, த.மு.மு.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.சென்னையில், சமீபத்தில் பெய்த கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், மத்திய சென்னை மாவட்ட தலைவர் துறைமுகம் எம்.இ.மீரான் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,

மண்ணடி : சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, த.மு.மு.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.சென்னையில், சமீபத்தில் பெய்த கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில், மத்திய சென்னை மாவட்ட தலைவர் துறைமுகம் எம்.இ.மீரான் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மண்ணடியில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஐதர் அலி கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.250க்கும் மேற்பட்டோருக்கு, 10 நாள்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய், மைதா, ரவை, கோதுமை மாவு ஆகியவை வழங்கப் பட்டன.மேலும், குழந்தைகள், பெரியோருக்கு தேவையான ஆடைகள் உள்ளிட்ட 1,000 ரூபாய் மதிப்புள்ள 14 வகையான நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X