பொது செய்தி

இந்தியா

காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு அ.தி.மு.க., செயலர் கோரிக்கை

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காய்கறி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.அ.தி.மு.க. கிழக்கு மாநில அமைப்பாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை; கடந்த ஆட்சியால் சீர்கெட்டுபோன நிதி நெருக்கடியிலும், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 5000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரம்

புதுச்சேரி : காய்கறி விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.

அ.தி.மு.க. கிழக்கு மாநில அமைப்பாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை; கடந்த ஆட்சியால் சீர்கெட்டுபோன நிதி நெருக்கடியிலும், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 5000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம், சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் அறிவித்து, வழங்க ஏற்பாடு நடக்கிறது.அ.தி.மு.க. சார்பில் மத்திய குழுவை சந்தித்து ரூ. 400 கோடி நிவாரண உதவி வழங்க கடிதம் கொடுத்தோம்.வீட்டிற்கு ரூ. 10 ஆயிரம் வழங்க கோரிய காங்., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மத்திய குழுவை சந்தித்து, உரிய நிவாரண நிதி வழங்குமாறு ஏன் கோரிக்கை வைக்கவில்லை.

இயற்கை பேரிடால் மக்கள் பாதிக்கப்படும்போது, அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து, மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற வேண்டியது அவசியம்.மழை காரணமாக புதுச்சேரியில் காய்கறி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ. 18 குறைத்தும் காய்கறி விலை அதிகரித்துள்ளது. மொத்த காய்கறி வியாபாரிகளை அரசு அழைத்து பேசி, விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். பாசிக், பாப்ஸ்கோ மூலம் நியாயமான விலையில் காய்கறி விற்பனை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X