பொது செய்தி

தமிழ்நாடு

பெசன்ட் நகர் கடற்கரையில் 15 டன் குப்பை அகற்றம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பெசன்ட்நகர், : அடையாறு ஆற்றில் அடித்துவரப்பட்டு, பெசன்ட் நகர் கடற்கரையில் ஒதுங்கிய, 15 டன் குப்பையை மாநகாரட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி, கடற்கரையை சுத்தப்படுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம் ஆதனுாரில் இருந்து சென்னை பட்டினம்பாக்கம் வரை ஓடும் அடையாறு ஆறு, 42.6 கி.மீ., நீளம் கொண்டது.செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் மற்றும் இதர நீர்நிலைகள், கால்வாய், வடிகால்களில் இருந்து

பெசன்ட்நகர், : அடையாறு ஆற்றில் அடித்துவரப்பட்டு, பெசன்ட் நகர் கடற்கரையில் ஒதுங்கிய, 15 டன் குப்பையை மாநகாரட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி, கடற்கரையை சுத்தப்படுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆதனுாரில் இருந்து சென்னை பட்டினம்பாக்கம் வரை ஓடும் அடையாறு ஆறு, 42.6 கி.மீ., நீளம் கொண்டது.செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் மற்றும் இதர நீர்நிலைகள், கால்வாய், வடிகால்களில் இருந்து வெளியேறும் மழை நீர், இந்த ஆறு வழியாக கடலில் சேர்கிறது. இதனுடன், குப்பையும் சேர்ந்து செல்கிறது. கடலுக்கு செல்லும் குப்பை,

மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை கடற்கரையில் ஒதுங்குவது வழக்கம். அந்த வகையில், பெசன்ட் நகர் கடற்கரையில், ஊரூர்குப்பம், ஓடை குப்பம் பகுதியில் அதிகமாக குப்பை கரை ஒதுங்கியது.மூன்று நாட்களாக, மாநகராட்சி துாய்மை ஊழியர்கள் குப்பையை அகற்றி, கடற்கரையை சுத்தம் செய்து வருகின்றனர்.இந்த பணியில், 80 ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மூன்று நாட்களில் 15 டன் குப்பை அகற்றப்பட்டு உள்ளது. குப்பையில், பிளாஸ்டிக், தெர்மாகோல், செருப்பு, மது பாட்டில்கள், ஆகாய தாமரை அதிகம் உள்ளன. இவற்றை தரம் பிரித்து, தொழில் நிறுவனங்கள் மற்றும் பெருங்குடி குப்பை கிடங்குக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X