சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் மோதல் ஒருவருக்கு கத்தி வெட்டு

Added : நவ 25, 2021
Share
Advertisement
மாதவரம் : பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் போட்டியில் ஏற்பட்ட மோதலால், கல்லுாரி மாணவரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில், இருவர் கைதாகினர்.நேற்று முன்தினம், சென்னை செங்குன்றத்தில் இருந்து பாரிமுனை சென்ற வழித்தடம் ௧௫௭ பேருந்து, மாதவரம் ரவுண்டானா மேம்பாலம் நிறுத்தத்தில் நின்றது. அப்போது, அதில் பயணித்த சென்னை அம்பேத்கர் கல்லுாரி மற்றும் மாநிலக் கல்லுாரி மாணவர்கள்,

மாதவரம் : பேருந்து படிக்கட்டில் பயணிக்கும் போட்டியில் ஏற்பட்ட மோதலால், கல்லுாரி மாணவரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில், இருவர் கைதாகினர்.நேற்று முன்தினம், சென்னை செங்குன்றத்தில் இருந்து பாரிமுனை சென்ற வழித்தடம் ௧௫௭ பேருந்து, மாதவரம்

ரவுண்டானா மேம்பாலம் நிறுத்தத்தில் நின்றது. அப்போது, அதில் பயணித்த சென்னை அம்பேத்கர் கல்லுாரி மற்றும் மாநிலக் கல்லுாரி மாணவர்கள், திடீரென கத்தியுடன் மோதிக் கொண்டனர். இதில் சரத்குமார், 19, என்ற மாணவருக்கு வெட்டு விழுந்தது. தகவலின்படி, மாதவரம் போலீசார் அங்கு சென்ற போது, மாணவர்கள் தப்பினர். விசாரணையில், பேருந்து படிக்கட்டில் யார் பயணிப்பது என்ற போட்டியால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது தெரிந்தது.இதையடுத்து, மாநிலக்கல்லுாரி முன்னாள் மாணவரான செங்குன்றம், பாலவாயலைச் சேர்ந்த தீனா, 21, மற்றும் அம்பேத்கர் கல்லுாரி மாணவரான அபினாஷ், 18, ஆகியோர், நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து இரு கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X