தெரு நாய் தொல்லை உச்சக்கட்டம்; ரெயின்போ நகரில் மக்கள் அச்சம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ரெயின்போ நகரில் அதிகரித்துள்ள தெரு நாய்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.புதுச்சேரி ரெயின்போ நகரில் ஒன்று இரண்டாக இருந்த தெரு நாய்களின் எண்ணிக்கை, தற்போது 10க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த நாய்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்திச் செல்வதால், சிலர் வாகனங்களில் இருந்து விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.கடந்த வாரம் ரெயின்போ

புதுச்சேரி : ரெயின்போ நகரில் அதிகரித்துள்ள தெரு நாய்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.புதுச்சேரி ரெயின்போ நகரில் ஒன்று இரண்டாக இருந்த தெரு நாய்களின் எண்ணிக்கை, தற்போது 10க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

இந்த நாய்கள், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்திச் செல்வதால், சிலர் வாகனங்களில் இருந்து விழுந்து விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.கடந்த வாரம் ரெயின்போ நகர் 3வது குறுக்கு தெருவில், 2 குழந்தைகளை தெரு நாய் கடித்துள்ளது. நாயிடம் இருந்து குழந்தையை காப்பாற்றச் சென்ற முதியவர் கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல் பல சம்பவங்கள் ரெயின்போ நகரில் நிகழ்ந்து வருகிறது. தினசரி ஒருவர் தெரு நாயிடம் கடிபட்டு செல்கிறார். குழந்தைகள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே, ரெயின்போ நகர் பகுதியில் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த, உழவர்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X