பொது செய்தி

இந்தியா

சட்டசபை குழுக்கள் நியமனம் எம்.எல்.ஏ.,க்களுக்கு புதிய பதவி

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையின் பல்வேறு குழுக்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை செயல்பாட்டிற்கு எம்.எல்.ஏ.,க்களை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக கொண்டு, 10 குழுக்கள் நியமிக்கப்படும். இக்குழு, ஆட்சி முடிவுற்றதும் காலாவதியாகி விடும். பின்னர், புதிய அரசு குழுவை நியமிக்கும்.அதன்படி, புதுச்சேரியில் தற்போது அமைந்துள்ள என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையின் பல்வேறு குழுக்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டசபை செயல்பாட்டிற்கு எம்.எல்.ஏ.,க்களை தலைவர் மற்றும் உறுப்பினர்களாக கொண்டு, 10 குழுக்கள் நியமிக்கப்படும்.

இக்குழு, ஆட்சி முடிவுற்றதும் காலாவதியாகி விடும். பின்னர், புதிய அரசு குழுவை நியமிக்கும்.அதன்படி, புதுச்சேரியில் தற்போது அமைந்துள்ள என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில், 5 குழுக்களை சபாநாயகர் மற்றும் அவை முன்னவரான முதல்வரும் கலந்து ஆலோசித்து, நியமித்துள்ளனர்.அதன் விபரம் வருமாறு: மதிப்பீட்டுக் குழு: தலைவர் - நாஜிம்; அலுவலால் - ரங்கசாமி, ரமேஷ்; உறுப்பினர்கள் - கல்யாணசுந்தரம், நேரு, ரிச்சர்ட்,

ராமலிங்கம், வைத்தியநாதன், நாகதியாகராஜன், பிரகாஷ்குமார், சிவசங்கர். பொதுக்கணக்கு குழு: தலைவர் - ரமேஷ்; அலுவலால் - ரங்கசாமி, நாஜிம்; உறுப்பினர்கள் - பி.ஆர்.சிவா, பாஸ்கர், லட்சுமிகாந்தன், ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு, கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக், ரமேஷ்பரம்பத்.மனுக்கள் குழு: தலைவர்-கல்யாணசுந்தரம்; உறுப்பினர்கள் -திருமுருகன், ஜான்குமார், செந்தில்குமார், பிரகாஷ்குமார், கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக். உறுதிமொழி குழு: தலைவர் - நேரு; உறுப்பினர்கள் ராமலிங்கம்,
ஆறுமுகம், அனிபால் கென்னடி, அசோக்பாபு, சிவசங்கர்.உரிமைக்குழு: தலைவர் - ராஜவேல்; உறுப்பினர்கள் - திருமுருகன், கல்யாணசுந்தரம், ஜான்குமார், ஆறுமுகம், அங்காளன்.இவர்களை அவை முன்னர் ரங்கசாமி ஒப்பு தலுடன், சபாநாயகர் செல்வம் உத்தரவின் பேரில், சட்டசபை செயலர் முனிசாமி நியமித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X