சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கட்டிப் போட்டு கொள்ளை உறவினர் உட்பட இருவர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
சேலையூர், : சேலையூர் அடுத்த அகரம் தென், குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் ரவி, 43; ஆசாரி பணி செய்கிறார். இவரது மனைவி சுகுணா, 37. தம்பதிக்கு, புஷ்பலதா, 19, என்ற மகள் உள்ளார்.கடந்த அக்., 23ம் தேதி, புஷ்பலதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத பெண் மற்றும் ஆண் ஆகியோர், வீட்டிற்கு வந்து உள்ளனர்.அவர்கள், 'ரவியின் உறவினர்கள் எனவும், திருமணத்திற்கு பத்திரிகை வைக்க

சேலையூர், : சேலையூர் அடுத்த அகரம் தென், குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் ரவி, 43; ஆசாரி பணி செய்கிறார். இவரது மனைவி சுகுணா, 37. தம்பதிக்கு, புஷ்பலதா, 19, என்ற மகள் உள்ளார்.

கடந்த அக்., 23ம் தேதி, புஷ்பலதா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத பெண் மற்றும் ஆண் ஆகியோர், வீட்டிற்கு வந்து உள்ளனர்.அவர்கள், 'ரவியின் உறவினர்கள் எனவும், திருமணத்திற்கு பத்திரிகை வைக்க வேண்டும்' எனக்கூறி, வீட்டில் இருந்து, தாம்பூல தட்டு ஒன்றை எடுத்து வருமாறு கூறியுள்ளனர்.

புஷ்பலதா தாம்பூல தட்டை எடுக்க சென்றபோது, மர்மநபர்கள் இருவரும் கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப் போட்டு, பீரோவில் இருந்த 7 சவரன் நகை, 1.30 லட்சம் ரூபாய் ஆகியவற்றை கொள்ளை அடித்து தப்பினர்.சேலையூர் போலீசார் விசாரித்தனர்.இதில், ரவி தன் மனைவியின் அக்கா மகளான, வேங்கைவாசல் சீதாலட்சுமி நகரில் வசிக்கும் சுமதி, 30 என்பவரிடம், 'தான் பணம் மற்றும் நகைகள் சேமித்து வைத்து இருப்பதாகவும், தனக்கும் தன் தம்பிக்கும் வீடு வாங்க வேண்டும்' எனக் கூறியதாக, போலீசாரிடம் தெரிவித்தார்.சந்தேகமடைந்த போலீசார், சுமதி மற்றும் அவரது கணவர் ராகவேந்திரனை, 34, நேற்று பிடித்து வந்து விசாரித்ததில், இருவரும் நகை, பணத்தை கொள்ளை அடித்தது தெரிய வந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X