சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இ.பி.எப்., சந்தாதாரர்களுக்கு 'இ - நாமினேஷன்' வசதி

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை : இ.பி.எப்., எனும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள், 'இ -- நாமினேஷன்' வசதியை பயன்படுத்தி பலன் அடையலாம் என, அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி, தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின்

சென்னை : இ.பி.எப்., எனும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள், 'இ -- நாமினேஷன்' வசதியை பயன்படுத்தி பலன் அடையலாம் என, அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்கால நலன் கருதி, தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை சேமிக்கப்படுகிறது.அறிமுகம்ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவர்களின் கணக்கில் உள்ள பணப்பலன், அவர்களது குடும்ப உறுப்பினர் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட நாமினியை சென்றடையும். கொரோனா காலத்தில் உயிரிழந்த நபர்கள், தங்கள் 'நாமினி' குறித்த விபரங்களை, தொழிலாளர்களின் வருங்கால

வைப்பு நிதி அமைப்பிற்கு முறையாக தெரிவிக்காததால், பி.எப்., பயன்களை பெற அவர்களது குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர்.இதற்கு தீர்வு காணும் விதமாக, நாட்டின், 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 'இ -- நாமினேஷன்' என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, இ.பி.எஸ்., சந்தாதாரர்கள், இணையதளம் வாயிலாகவும், இ -- சேவை மையம் வாயிலாகவும், தங்கள் குடும்பத்தினர் அல்லது நாமினியின் ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன், 'இ -- நாமினேஷன்' பதிவு செய்யலாம். இதன் வாயிலாக எதிர்பாராத அசம்பாவிதங்களின் போது, சந்தாதாரின் 'நாமினி' எளிதில் பணப்பலனை பெற முடியும்.தனி குழுஇது குறித்து, வருங்கால வைப்பு நிதியத்தின் சென்னை தெற்கு மண்டல கமிஷனர் ஹான்சிங் கூறியதாவது:சென்னை தெற்கு மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், 9 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இ -- நாமினேசனுக்காக தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பிரதான நிறுவனங்களுக்கு சென்று இ -- நாமினேஷன் குறித்து விளக்குவர்.சென்னையில் உள்ள பி.எப்., அலுவலகத்திற்கு வருவோருக்கு உதவி செய்ய அலுவலகத்திலும், ஒரு குழு செயல்படுகிறது. வரும் டிசம்பர் இறுதிக்குள், 50 சதவீதம் பேர் இ- - நாமினேஷன் செய்வர் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X