சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாட்டிறைச்சி கடையில் சுகாதாரத் துறை ஆய்வு

Added : நவ 25, 2021
Share
Advertisement
ஆதம்பாக்கம் : நம் நாளிதழ் செய்தியின் நடவடிக்கையாக, ஆதம்பாக்கத்தில் உள்ள சர்ச்சைக்குறிய மாட்டிறைச்சி கடையில், மாநகராட்சி சுகாதாரத் துறையினர், கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கத்தில் பரமேஸ்வரன் நகர் அமைந்துள்ளது. அங்கு, நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.குடியிருப்புகளுக்கு மத்தியில்

ஆதம்பாக்கம் : நம் நாளிதழ் செய்தியின் நடவடிக்கையாக, ஆதம்பாக்கத்தில் உள்ள சர்ச்சைக்குறிய மாட்டிறைச்சி கடையில், மாநகராட்சி சுகாதாரத் துறையினர், கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், ஆதம்பாக்கத்தில் பரமேஸ்வரன் நகர் அமைந்துள்ளது. அங்கு, நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.குடியிருப்புகளுக்கு மத்தியில் மாட்டிறைச்சி கடை ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. தினசரி அங்கு மாடுகள் வெட்டப்படுவதாகவும், அதன் கழிவுகள், ரத்தக்கரைகள் மழை நீர் வடிகால் வழியாகவும், சாலையிலும் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது.இதனால், அந்த பகுதி முழுதும் துர்நாற்றம் வீசி வருவதாகவும், மழை நீர் வடிகாலில் சேகரமாகும் கழிவுகளால் கொசு உற்பத்தி அதிகரித்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இது, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, ஆலந்துார் மண்டல சுகாதார அலுவலர், கால்நடை துறை அதிகாரிகள், மாநகராட்சியினர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.

பின், சம்பந்தப்பட்ட மாட்டிறைச்சி உரிமையாளருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:புகார் எழுந்த மாட்டிறைச்சி கடை முறைப்படி, 'லைசன்ஸ்' பெற்று இயங்கி வருகிறது. அங்கு மாடுகள் வெட்டப்படவில்லை. ஆட்டு தொட்டி பகுதியில் இருந்து இறைச்சிகளை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.தொடர்மழையால் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக, மாட்டிறைச்சி கடையின் கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது. மேலும், சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கழிவு நீர் வெளியேறியதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை, கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X