சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல்வருக்கு கடிதம் எழுதிய மூதாட்டிக்கு நிதி உதவி

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை, நங்கநல்லுார், 35வது தெருவை சேர்ந்தவர் ரங்காச்சாரி, 75. இவரது மனைவி கவுசல்யா,72. இவர்களது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 9ம் தேதி உடல்நல பாதிப்பால் ரங்காச்சாரி காலமானார். வாழ்வாதாரம் இழந்து தவித்த மூதாட்டி, தனது நிலை குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு, கடந்த 10 நாட்களுக்கு முன் கடிதம் எழுதி, உதவி கோரியிருந்தார். இந்தக் கடிதம் குறித்து முதல்வரின்

சென்னை : சென்னை, நங்கநல்லுார், 35வது தெருவை சேர்ந்தவர் ரங்காச்சாரி, 75. இவரது மனைவி கவுசல்யா,72. இவர்களது மகன் மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த, 9ம் தேதி உடல்நல பாதிப்பால் ரங்காச்சாரி காலமானார்.

வாழ்வாதாரம் இழந்து தவித்த மூதாட்டி, தனது நிலை குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு, கடந்த 10 நாட்களுக்கு முன் கடிதம் எழுதி, உதவி கோரியிருந்தார். இந்தக் கடிதம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசனை தொடர்பு கொண்டு நேரில் சென்று உதவி செய்ய,முதல்வர் உத்தரவிட்டார்.இதையடுத்து, கவுசல்யா வீட்டிற்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறிய அமைச்சர், 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை வழங்கினார். மேலும் உதவித் தேவைப்படும் பட்சத்தில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X