பொது செய்தி

இந்தியா

லாட்டரி விற்றவர் கைது

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி ; புதுச்சேரி பெரிய மார்க்கெட், பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.பெரியக்கடை போலீசார், பூக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். பூக்கடை அருகே நின்றிருந்த மேல்சாத்தமங்கலம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த அன்புதுரை, 38; என்பவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை கண்டு

புதுச்சேரி ; புதுச்சேரி பெரிய மார்க்கெட், பூக்கடைகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பெரியக்கடை போலீசார், பூக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். பூக்கடை அருகே நின்றிருந்த மேல்சாத்தமங்கலம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த அன்புதுரை, 38; என்பவர், அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதை கண்டு பிடித்தனர்.

அவரை கைது செய்து, அசாம் மாநிலத்தில் விற்பனை செய்யப்படுவது போன்று அச்சிடப்பட்ட லாட்டரி சீட்டுகள், ரூ. 5000 பணம், மொபைல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.அன்புதுரைக்கு லாட்டரி சீட்டு சப்ளை செய்த மொத்த விற்பனையாளர், திலாஸ்பேட்டையை சேர்ந்த லிங்கேஸ்வரன், 36; என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X