சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாறு மண்டலத்தில் குடிநீர் மாதிரி சேகரிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
அடையாறு : குடிநீரால் ஏற்படும், நோய் பாதிப்பை தடுக்க, அடையாறு மண்டலத்தில், தினமும் 60 இடங்களில் இருந்து குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.அடையாறு மண்டலத்தில் உள்ள 13 வார்டுகளில், 88 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான பகுதிகளில், வீட்டு குழாய் இணைப்பு உள்ளது. கிண்டி, கோட்டூர்புரம், தரமணி, வேளச்சேரியில் சில பகுதிகளில் பொது தொட்டி, பொது குழாய்

அடையாறு : குடிநீரால் ஏற்படும், நோய் பாதிப்பை தடுக்க, அடையாறு மண்டலத்தில், தினமும் 60 இடங்களில் இருந்து குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.

அடையாறு மண்டலத்தில் உள்ள 13 வார்டுகளில், 88 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. பெரும்பாலான பகுதிகளில், வீட்டு குழாய் இணைப்பு உள்ளது. கிண்டி, கோட்டூர்புரம், தரமணி, வேளச்சேரியில் சில பகுதிகளில் பொது தொட்டி, பொது குழாய் உள்ளது. மழைக்காலங்களில் குழாய் உடைப்பு, விரிசல் போன்ற காரணத்தால், குடிநீரில் கழிவு நீர் கலக்க வாய்ப்புள்ளது.

இதனால், நோய் பாதிப்பு ஏற்படும். இதை தடுக்க, குடிநீரில் உள்ள குளோரின் அளவை பரிசோதிக்க, குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.அடையாறு மண்டலத்தில், மழைக்கு முன், தினமும் 10 இடங்களில் இருந்து குடிநீர் மாதிரி எடுக்கப்பட்டது. தற்போது, 60 இடங்களில் குடிநீர் மாதிரி எடுக்கப்படுகிறது.வீட்டு குழாய், பொது குழாய், பொது தொட்டி, நீரேற்று நிலையம் போன்ற இடங்களில் இருந்து, குடிநீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது.குடிநீரில் கலந்துள்ள திரவ வடிவிலான குளோரின் அளவு, 240 முதல் 250 வரை இருக்க வேண்டும். பரிசோதனையில், மாறுபட்ட அளவு வந்தால், அதற்கு ஏற்ப குளோரின் அதிகமாகவும், குறைவாகவும் கலக்கப்படும்.இதன் மூலம், சுகாதாரமான குடிநீர் வழங்குவதுடன், குடிநீரால் ஏற்படும் தொற்றுநோய் பரவல் தடுக்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X