பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: இதற்கு பெயர் தான் விடியலா!

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (112)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.மகேஷ், குளச்சல், குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:குற்றவாளிகளில் பல்வேறு வகை உண்டு. வழிப்பறி திருடன், வீடு புகுந்து கொள்ளையடிப்பவன், செயின் பறிப்பவன், நெடுஞ்சாலையில் லாரியில் இருந்து பொருட்களை களவாடுவோர், அடிதடியில் ஈடுபடுவோர் என பல வகையினர் உண்டு.இவர்களை
இது, உங்கள், இடம், பூமிநாதன், இன்ஸ்பெக்டர், கொலை, விடியல்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



எஸ்.மகேஷ், குளச்சல், குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

குற்றவாளிகளில் பல்வேறு வகை உண்டு. வழிப்பறி திருடன், வீடு புகுந்து கொள்ளையடிப்பவன், செயின் பறிப்பவன், நெடுஞ்சாலையில் லாரியில் இருந்து பொருட்களை களவாடுவோர், அடிதடியில் ஈடுபடுவோர் என பல வகையினர் உண்டு.இவர்களை தவிர, கூலிக்கு கொலை செய்வோர், போதைப் பொருள் கடத்துவோர், கனிமவள கொள்ளையர் என, அதி தீவிர குற்றவாளிகளும் உண்டு.

போதைப் பொருள் கடத்தல் கும்பலும், கனிமவள கொள்ளையரும் கொலை செய்வதற்கு கூட அஞ்சாதோர். இவர்களால், 100க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.பொதுவாக கோழி, ஆடு, மாடு திருடுவோர் கொலை செய்ய துணிய மாட்டார்கள்; பொதுமக்களிடம் சிக்கினால், அடி வாங்கி கொள்வர்.

ஆனால், அந்த வரலாற்றையே சிதைக்கும் வண்ணம் ஒரு சம்பவம், புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் நடந்துள்ளது.சிலர், இருசக்கர வாகனத்தில் ஆடுகளை திருடி செல்வதை கண்ட, திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனை, அந்த கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது.


latest tamil news


தி.மு.க., ஆட்சியில், ஆடு திருடும் கும்பலே, கொலை வெறியோடு களம் இறங்கியுள்ளது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த ஆட்சி, நம்மை ஒன்றும் செய்யாது என்ற தைரியம், அவர்களுக்கு முளைத்து விட்டதா?போகிற வேகத்தைப் பார்த்தால் கோழி திருடுவோர், வழிப்பறி திருடர்களும் கூட, கையில் அரிவாளோடு இறங்கி, கொலை முயற்சியில் ஈடுபடுவரோ?தமிழகத்துக்கு நல்ல 'விடியல்' கிடைச்சுருக்கு சாமி!

Advertisement




வாசகர் கருத்து (112)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-நவ-202101:40:59 IST Report Abuse
Matt P ஆடு மாடு திருடுபவர்கள் கொலை செய்யமாட்டார்கள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. கோபம் என்று ஓன்று வந்துவிட்டால் மனிதனுக்கு மூளை செயலிழந்து விடுகிறது. தன்னையே கொல்லும் சினம். அடுத்தவனை சும்மா விடுமா? பச்சை பிள்ளைகள் என்றும் பாராமல் ...காக தங்கள் பிள்ளைகளையே கொல்லும் காலம் இது...மூன்று சிறுவர்களை ஒரு காவல் அதிகாரி சமாளிக்க முடியாதது என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
25-நவ-202121:06:07 IST Report Abuse
Dhurvesh விடியல் ஆட்சி இப்படி தான் இருக்கும் , பிடிக்காதவர்கள் வெளி மாநிலம் செல்லலாம்
Rate this:
Cancel
Jayakandhan KS - coimbatore,இந்தியா
25-நவ-202118:17:16 IST Report Abuse
Jayakandhan KS என்னது தமிழர்கள் என்று எழுத கற்று கொண்டார்களா ...?
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
26-நவ-202101:04:33 IST Report Abuse
Matt Pஎன்ன சொல்ல வரீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X