இது உங்கள் இடம்: இதற்கு பெயர் தான் விடியலா!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: இதற்கு பெயர் தான் விடியலா!

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (113)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:எஸ்.மகேஷ், குளச்சல், குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:குற்றவாளிகளில் பல்வேறு வகை உண்டு. வழிப்பறி திருடன், வீடு புகுந்து கொள்ளையடிப்பவன், செயின் பறிப்பவன், நெடுஞ்சாலையில் லாரியில் இருந்து பொருட்களை களவாடுவோர், அடிதடியில் ஈடுபடுவோர் என பல வகையினர் உண்டு.இவர்களை
இது, உங்கள், இடம், பூமிநாதன், இன்ஸ்பெக்டர், கொலை, விடியல்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



எஸ்.மகேஷ், குளச்சல், குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

குற்றவாளிகளில் பல்வேறு வகை உண்டு. வழிப்பறி திருடன், வீடு புகுந்து கொள்ளையடிப்பவன், செயின் பறிப்பவன், நெடுஞ்சாலையில் லாரியில் இருந்து பொருட்களை களவாடுவோர், அடிதடியில் ஈடுபடுவோர் என பல வகையினர் உண்டு.இவர்களை தவிர, கூலிக்கு கொலை செய்வோர், போதைப் பொருள் கடத்துவோர், கனிமவள கொள்ளையர் என, அதி தீவிர குற்றவாளிகளும் உண்டு.

போதைப் பொருள் கடத்தல் கும்பலும், கனிமவள கொள்ளையரும் கொலை செய்வதற்கு கூட அஞ்சாதோர். இவர்களால், 100க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.பொதுவாக கோழி, ஆடு, மாடு திருடுவோர் கொலை செய்ய துணிய மாட்டார்கள்; பொதுமக்களிடம் சிக்கினால், அடி வாங்கி கொள்வர்.

ஆனால், அந்த வரலாற்றையே சிதைக்கும் வண்ணம் ஒரு சம்பவம், புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் பகுதியில் நடந்துள்ளது.சிலர், இருசக்கர வாகனத்தில் ஆடுகளை திருடி செல்வதை கண்ட, திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த எஸ்.எஸ்.ஐ., பூமிநாதனை, அந்த கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது.


latest tamil news


தி.மு.க., ஆட்சியில், ஆடு திருடும் கும்பலே, கொலை வெறியோடு களம் இறங்கியுள்ளது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. இந்த ஆட்சி, நம்மை ஒன்றும் செய்யாது என்ற தைரியம், அவர்களுக்கு முளைத்து விட்டதா?போகிற வேகத்தைப் பார்த்தால் கோழி திருடுவோர், வழிப்பறி திருடர்களும் கூட, கையில் அரிவாளோடு இறங்கி, கொலை முயற்சியில் ஈடுபடுவரோ?தமிழகத்துக்கு நல்ல 'விடியல்' கிடைச்சுருக்கு சாமி!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X