புதுச்சேரி வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன் மாரடைப்பால் காலமானார்

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி வர்த்தக சபை தலைவரும், தொழிலதிபருமான செண்பகராஜன், மாரடைப்பினால் நேற்று காலமானார்.புதுச்சேரி அண்ணா நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செண்பகராஜன், 72; தொழிலதிபரான இவர், ஓட்டல் அண்ணாமலை, செண்பகா டிம்பர்ஸ், ஸ்ரீராஜா டிரேடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார்.புதுச்சேரி வர்த்தக சபையின் 15வது தலைவராக கடந்த 2011ம் ஆண்டு முதல் செண்பகராஜன் பொறுப்பு

புதுச்சேரி : புதுச்சேரி வர்த்தக சபை தலைவரும், தொழிலதிபருமான செண்பகராஜன், மாரடைப்பினால் நேற்று காலமானார்.புதுச்சேரி அண்ணா நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செண்பகராஜன், 72; தொழிலதிபரான இவர், ஓட்டல் அண்ணாமலை, செண்பகா டிம்பர்ஸ், ஸ்ரீராஜா டிரேடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார்.பு

துச்சேரி வர்த்தக சபையின் 15வது தலைவராக கடந்த 2011ம் ஆண்டு முதல் செண்பகராஜன் பொறுப்பு வகித்து வந்தார்.நேற்று இரவு 7:00 மணியளவில், காமராஜர் சாலையில் உள்ள தனது அண்ணாமலை ஓட்டல் வளாகத்தில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென மயங்கி விழுந்தார்.அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே அவரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பால் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.இறந்த செண்பகராஜனுக்கு உமாவதி என்ற மனைவி, ஜெய்கணேஷ், அண்ணாமலைபிரபு என இரு மகன்கள் உள்ளனர். அவரது உடல் இன்று (25ம் தேதி) மாலை 4:00 மணிக்கு கருவடிக்குப்பம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.2 மணி நேரம் கடைகள் மூடல் வர்த்தக சபை தலைவர் செண்பகராஜன் மறைவையொட்டி, இன்று (25ம் தேதி) மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை, அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களை மூடி, இரங்கல் தெரிவிக்குமாறு வர்த்தக சபை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X