சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காய்கறி விலை விர்ர்ர்...! முருங்கையும் 'சதம்' அடித்தது

Added : நவ 25, 2021
Share
Advertisement
கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவால் விலை அதிகரித்து உள்ளது. தக்காளியை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் 100யை கடந்தது. மேலும், அவரைக்காய், பீன்ஸ், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி விலை அதிகரித்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, ஆந்திரா, கர்நாடக, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து

கோயம்பேடு : கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வரத்து குறைவால் விலை அதிகரித்து உள்ளது. தக்காளியை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் 100யை கடந்தது. மேலும், அவரைக்காய், பீன்ஸ், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி விலை அதிகரித்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, ஆந்திரா, கர்நாடக, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் காய்கறி வரத்து உள்ளது. தற்போது, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், விளைச்சல் பாதிக்கப்பட்டு, காய்கறி வரத்து குறைந்துள்ளது.மார்க்கெட்டிற்கு தினமும் 5,500 டன் காய்கறி தேவைப்படும் நிலையில், நேற்று 3,000 டன் காய்கறி மட்டுமே வந்துள்ளன.இதன் காரணமாக, காய்கறி விலை அதிகரித்துள்ளது. தினமும், 80 -- 90 லாரி தக்காளி வந்த நிலையில், தற்போது, 30 -- 35 லாரி மட்டுமே வருகின்றன. இதனால், ஒரு கிலோ தக்காளி, 120 -- 160 ரூபாய்க்கு விற்பனைஆகிறது.வெண்டைக்காய்தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம், ஆந்திரா உள்ளி ட்ட பகுதிகளில் இருந்து அவரைக்காய் வரத்துள்ளது. மழை பாதிப்பால், 50 டன் வந்த இடத்தில் தற்போது, 10 -- 15 டன் அவரைக்காய் மட்டுமே வருகின்றன.இதனால், ஒரு கிலோ அவரைக்காய், 70 -- 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், விழுப்புரம், பண்ரூட்டி, கிருஷ்ணகிரி, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட பகுதிகளில், இருந்து வெண்டைக்காய் வரத்து உள்ளது.தினமும், 100 டன் வெண்டைக்காய் வரத்து உள்ள நிலையில், தற்போது, 15 -- 20 டன் மட்டுமே வருகின்றன. இதனால், ஒரு கிலோ வெண்டைக்காய், 60 -- 70 ரூபாய்க்கு விற்பனைஆகிறது.15 லாரிகள்தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் வரத்து உள்ளது.இதன் சீசன் முடிந்த நிலையில், நெல்லையில் இருந்து மட்டும் 3 டன் முருங்கைக்காய் வரத்துள்ளது.

இதனால், 1 கிலோ முருங்கைக்காய், 90 -- 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தனியார் கடைகளுக்கு, தக்காளி லாரிகள் தனியாக செல்கின்றன.மார்க்கெட்டிற்கு, 35 லாரிகள் வந்த நிலையில், மற்ற பகுதிகளுக்கு, 15க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன.இதனால், மார்க்கெட்டிற்கு வரும் லாரிகள் எண்ணிக்கை வைத்து விலை நிர்ணையிக்கப்படுகிறது. அனைத்து லாரிகளும் மார்க்கெட்டிற்கு வந்து சென்றால், விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X