பொது செய்தி

தமிழ்நாடு

பொது போக்குவரத்து பயணம்; மண்டல அலுவலர்களும் துவக்கம்

Updated : நவ 25, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை-சென்னையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அதிகாரிகளை தொடர்ந்து, ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அலுவலர்களும், மாசற்ற பொது போக்குவரத்து பயணத்தை துவக்கியுள்ளனர்.சென்னையில் வாகன புகையால் ஏற்படும் மாசை குறைக்க, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக பணியாளர்கள், புதன்கிழமை தோறும் மாசற்ற பொது போக்குவரத்து பயணத்தை துவக்கினர். அதன்படி,
பொது போக்குவரத்து, மண்டல அலுவலர்கள், துவக்கம்,சென்னை

சென்னை-சென்னையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அதிகாரிகளை தொடர்ந்து, ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அலுவலர்களும், மாசற்ற பொது போக்குவரத்து பயணத்தை துவக்கியுள்ளனர்.

சென்னையில் வாகன புகையால் ஏற்படும் மாசை குறைக்க, கிண்டியில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலக பணியாளர்கள், புதன்கிழமை தோறும் மாசற்ற பொது போக்குவரத்து பயணத்தை துவக்கினர். அதன்படி, ஒவ்வொரு புதன்கிழமையும், அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை சைக்கிள், மின்சார வாகனம் அல்லது பொது போக்குவரத்தை பயன்படுத்தி அலுவலகம் வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை மண்டலத்தில் ஸ்ரீபெரும்புதுார், மறைமலை நகர், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, அம்பத்துார், அரும்பாக்கம் ஆகிய ஆறு இடங்களில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல் ஆய்வகங்களில் பணியாற்றுவோரும், நேற்று முதல் மாசற்ற பொது போக்குவரத்து பயணத்தை துவக்கியுள்ளனர்.


latest tamil news


சென்னை மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி கூறியதாவது:அனைத்து பணியாளர்களும் ஒவ்வொரு புதன்கிழமையும், மாசற்ற பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். அதேபோல, இதர அரசு அலுவலகங்களிலும், மாசற்ற பொது பயணத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar Anand - Chennai,இந்தியா
25-நவ-202116:31:03 IST Report Abuse
Sundar Anand நல்ல முயற்சி வாழ்த்துக்கள் இதை வரம் மூன்று நாட்கள் எல்லா அரசு ஊழியர்களும் செய்யலாமே திங்கள், புதன் மற்றும் வெள்ளி
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
25-நவ-202114:54:49 IST Report Abuse
Hari பாவம் இவர்களுக்கு அங்கு என்ன வேலைனு எல்லோருக்கும் தெரியுமே .போனாலும் ஒண்ணுதான் போகலைனாலும் ஒண்ணுதான் .கமிஷன் வீடுதேடி வந்துரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X