பொது செய்தி

தமிழ்நாடு

புறநகரில் நிரம்பிய ஏரிகள் மீன் பிடிப்போர் அதிகரிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
செங்குன்றம் : சென்னை புழல் ஏரி, சோழவரம் ஏரி, மாதவரம் ரெட்டேரி, அம்பத்துார் மற்றும் கொரட்டூர் ஏரிகள் பருவ மழை காரணமாக நிரம்பி உள்ளன. அவற்றில் இருந்து, வெளியேறும் உபரி நீர் போக்குகால்வாய் வழியாக, எண்ணுார் கடலுக்கு பாய்கிறது.புழல் ஏரியில் இருந்து, உபரி நீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை நிறுத்தப்பட்டது. ஆனாலும், கால்வாயில் வழிந்தோடும் நீரில் வலை வீசியும், துாண்டில்

செங்குன்றம் : சென்னை புழல் ஏரி, சோழவரம் ஏரி, மாதவரம் ரெட்டேரி, அம்பத்துார் மற்றும் கொரட்டூர் ஏரிகள் பருவ மழை காரணமாக நிரம்பி உள்ளன. அவற்றில் இருந்து, வெளியேறும் உபரி நீர் போக்குகால்வாய் வழியாக, எண்ணுார் கடலுக்கு பாய்கிறது.

புழல் ஏரியில் இருந்து, உபரி நீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை நிறுத்தப்பட்டது. ஆனாலும், கால்வாயில் வழிந்தோடும் நீரில் வலை வீசியும், துாண்டில் போட்டும் ஜிலேபி, கெண்டை, சென்னாகுன்னி உள்ளிட்ட பல ரக மீன்களை பிடிக்கின்றனர்.அதே போன்று, மாதவரம்ரெட்டேரி கலங்கல், சோழவரம், கொரட்டூர், அம்பத்துார் ஏரி கலங்கல்களில், சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பலரும், நேற்று காலை முதல் மீன் பிடித்து, அங்கேயே விற்பனை செய்து வருகின்றனர். தொடர் மழையால் வேலை வாய்ப்பின்றி இருந்தவர்களும், இளைஞர்களும், தற்காலிகமாகமீன் பிடி தொழிலில்ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X