பொது செய்தி

தமிழ்நாடு

எம்.சி., சாலையில் பள்ளங்கள் சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

Added : நவ 25, 2021
Share
Advertisement
வண்ணாரப்பேட்டை, : வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலை, பிரதான வர்த்தக பகுதி. இதை,'குட்டி தி.நகர்' என அழைப்பர். இங்கு 200க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையில், துணி விற்பனை நடக்கிறது.சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து

வண்ணாரப்பேட்டை, : வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலை, பிரதான வர்த்தக பகுதி. இதை,'குட்டி தி.நகர்' என அழைப்பர்.

இங்கு 200க்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளன. மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையில், துணி விற்பனை நடக்கிறது.சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவ்வழியே தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் தார் பெயர்ந்து, குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.மழைக்காலத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் அவதிக்கு

உள்ளாகின்றனர்.இதனால், வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில் கூட செல்ல முடியாமல், ஆமை வேகத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைவாக செல்ல முடிவதில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'சமீபத்தில் பெய்த கன மழையால் சாலை பழுதடைந்து, மிகவும் மோசமான நிலையில் காட்சியளிக்கிறது. பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால், தினமும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X