பொது செய்தி

இந்தியா

கரும்பு விவசாயிகள் அமைச்சரிடம் மனு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருக்கனுார் : புதுச்சேரி விவசாயிகள் தமிழக பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் . மண்ணாடிப்பட்டு தொகுதி கரும்பு விவசாயிகள், அமைச்சர் நமச்சிவாயத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: லிங்காரெட்டிபாளையத்தில் இயங்கி வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த 2016ம் ஆண்டு முதல் அரவை பணி துவங்கப்படாமல்
 கரும்பு விவசாயிகள் அமைச்சரிடம் மனு

திருக்கனுார் : புதுச்சேரி விவசாயிகள் தமிழக பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்ப அரசு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

மண்ணாடிப்பட்டு தொகுதி கரும்பு விவசாயிகள், அமைச்சர் நமச்சிவாயத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: லிங்காரெட்டிபாளையத்தில் இயங்கி வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலை, கடந்த 2016ம் ஆண்டு முதல் அரவை பணி துவங்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. இதனால், கரும்பு பயிரிடும் விவசாயிகள், பயிர் செய்த கரும்பை உரிய காலத்தில் அறுவடை செய்ய முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம்.

எனவே, உரிய நேரத்தில் கரும்பு அறுவடை செய்து பணம் பட்டுவாடா செய்யக்கூடிய சர்க்கரை ஆலைக்கு கரும்பை பதிவு செய்து அனுப்ப, அனுமதி வழங்க வேண்டும்.குறிப்பாக, திருக்கோவிலுாரில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்ப அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X